கனடா கியூபெக்கில் கராத்தே மத்தியஸ்தர்களாக புலம்பெயர் தமிழர்கள்

கனடா கியூபெக் மாநிலத்தின் அங்கீகாரம் பெற்ற கராத்தே கியூபெக் சம்மேளனத்தின் கராத்தே மத்தியஸ்தர் தேர்வில் ரிசான் மற்றும் அருஷா ஆகியோர் சித்தியடைந்துள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகளை கராத்தே பிரதம பயிற்றுனர் எஸ்.மனோகரன் வழங்கியிருந்தார். கராத்தே கியூபெக் சம்மேளனம் கராத்தே கனடா எனும் தேசிய சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும்.
கல்லறையைத் தோண்டிய மயானக் காப்பாளர் கைது

மொரட்டுவை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மயானம் ஒன்றில், புதைக்கப்பட்ட சடலத்திலிருந்த தங்க நகைகளைத் திருடுவதற்காக கல்லறையைத் தோண்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்செயலில் ஈடுபட்ட மயானக் காப்பாளர் மற்றும் இருவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அவர்களில் ஒருவரை மொரட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரட்டுவை ராவத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்மணி ஒருவர் கடந்த 15-ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் ஏழாம் நாள் தானம் (நினைவுச் சடங்கு) நேற்று (22) நடைபெற்ற நிலையில், அவரது […]
வசாவிளான் கிழக்கு பிரதேசத்தில் 2 ஏக்கர் காணி விடுவிப்பு

தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 2 ஏக்கர் காணி நேற்றைய தினம் (23) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இக்காணி விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களைக் கையளிக்கும் நிகழ்வு, காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் அச்சுவேலி ஒட்டகப்புலம் 511 பிரிகேட்டின் கேணல் பி.எம்.சி. வன்னிநாயக்க, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இந்த ஆவணங்களைக் கையளித்தார். இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் மற்றும் மேலதிக அரசாங்க […]
800 லீற்றர் டீசலை பதுக்கிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கைது
அம்பாறை, ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் கொள்கலன்களில் 800 லீற்றர் டீசலைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், அங்கு கடமையாற்றும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், கொள்கலன்களில் நிரப்பப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 லீற்றர் டீசலைக் கண்டுபிடித்து மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அங்கு கடமையாற்றும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை […]
வானிலை முன்னறிவிப்பு
மேல், தென், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். மேல், […]
வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

எரிபொருள், வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு அரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, எதிர்காலத்தில் நாட்டுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால், தற்போதுள்ள எரிபொருள் கையிருப்புகளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், […]