திரு சுப்பிரமணியம் தேவரூபன்

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  திரு சுப்பிரமணியம் தேவரூபன் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், நவரூபன்(சுவிஸ்), சிவரூபன்(இலங்கை), ஜெயரூபன்(லண்டன்), காந்தரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுகந்தினி(சுவிஸ்), கெளதமி(இலங்கை), பிரகலா(லண்டன்), தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், சஜீகா(சுவிஸ்), சஜீவன்(சுவிஸ்), சஜீத்தன்(சுவிஸ்), விதுரா, டிலக்சிகா, மயூரிகா(இலங்கை), சியானி(இலங்கை), ஜீவிக்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரம்; Wednesday, […]

மதுபோதையில் இருந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்; பருத்தித்துறையில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார்  தாக்கியுள்ளார்கள். சிவில் உடை மட்டுமன்றி மேல் ஆடைகள் இல்லாது மது அருந்தியவாறு இருந்த காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பொலிஸார் மேற்கோண்ட தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டணி தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் அறிக்கை வெளியீடு!

தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள கூட்டணி தொடர்பான அறிக்கையில், அனைவருக்கும் வணக்கம், புதுச்சேரி மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, “நேயம் மக்கள் கழகம்” நிறுவனத் தலைவர் நேரு (எ) குப்புசாமி MLA அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் […]

இலங்கையில் சீனப் பெண் கொலை!

கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில், சீன நாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (23) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 26 வயதுடைய சீன நாட்டுப் பெண் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் முன்னாள் காதலனான சீன நாட்டுப் பிரஜை ஒருவரே இந்தக் கொலையைச் செய்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என […]

சுங்க அதிகாரி ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது

இலங்கை சுங்கத்தின் மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தற்போது சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சுங்க அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை என மருந்துப் பரிசோதகரால் பரிந்துரைக்கப்பட்ட பாமோயில் (Palm Oil) அடங்கிய 5 கொள்கலன்களை அழிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், அந்தப் பாமோயில் அடங்கிய கொள்கலன்களைத் தனிப்பட்ட முனையம் ஒன்றிற்கு எடுத்துச் சென்று, ஒரு கொள்கலனில் இருந்த பாமோயிலை 40 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகத் […]

தரவுப் பாதுகாப்பு அதிகார சபைக்குப் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

தரவுப் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரி திமுத் பாஷித அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். 2026 மார்ச் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதிலும், இலங்கையில் தனியுரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் இந்த நியமனம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இதற்கு முன்னர் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பணிப்பாளராகப் பணியாற்றிய அத்தபத்து, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு […]

ஏயர் கனடா எக்ஸ்பிரஸ் விமான விபத்து: சம்பவ இடத்தில் நின்றவர்களது கருத்துக்கள்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் நேற்று அதிகாலை ஏயர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். மேற்படி விபத்து குறித்து சம்பவ இடத்தில் நின்றவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஏயர் கனடா பயணி: “விமானிகளின் துரித நடவடிக்கை எங்களைக் காப்பாற்றியது” “அவர்கள் எங்களைக் காப்பாற்றியதற்காக நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால், அவர்கள் தங்களின் குடும்பங்களிடம் மீண்டும் செல்ல […]

அரசின் ஏழு திணைக்களங்களால் கிழக்கில் ஒரு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அபகரிப்பு – கிழக்கு மாகாண நிலமீட்பிற்கான அமைப்பு!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அரசின் ஏழுவகையான பொறிமுறையின் மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண நிலமீட்பிற்கான வலையமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் நிறைவுக்கு வந்த சூழ்நிலையிலும் இன்று வரை குறிப்பிடத்தக்க அளவு மக்கள் தங்கள் நிலங்களுக்கான முறையான காணி ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசு வேற்று இனத்தினர் மற்றும் முதலாளிகளால் திட்டமிடப்பட்ட வகையில் மக்களின் குடியிருப்பு மற்றும் ஜீவனோபாயத்திற்குரிய தொழில் இடங்கள் மற்றும் மத […]

ஈரானின் ‘ஐரிஸ் டெனா’ கப்பலில் வந்தவர்களிடம் இருந்தது இசைக்கருவிகளே தவிர ஆயுதங்கள் அல்ல – இலங்கைக்கான ஈரானிய தூதுவர்

ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் டெனா தாக்கப்படுவதற்கு முன்பு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், அது ஒரு அமைதிப் பயணத்தையே மேற்கொண்டிருந்தது என்றும் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இந்தச் சம்பவம் குறித்துப் பல முக்கிய உண்மைகளைத் தெளிவுபடுத்தினார்: 1. தாக்குதலுக்கு முந்தைய நிலை: “எங்களிடம் உள்ள தகவல்களின்படி, ‘டெனா’ கப்பல் போருக்காகத் தயாராக இருக்கவில்லை. அது போருக்காகவோ அல்லது மோதலுக்காகவோ இங்கு வரவில்லை,” என்று […]

வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக வெளியே வந்த இரும்புக்கம்பியை அகற்றிய அறுவைச் சிகிச்சை வெற்றி

வயிற்றைத் துளைத்து முதுகின் வழியாக இரும்புக்கம்பி வெளியே வந்த நிலையில், மிக மோசமான விபத்துக்குள்ளான ஒருவரின் உயிரைப் பதுளை வைத்தியசாலை வைத்தியக் குழுவினர் வெற்றிகரமாகக் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு விபத்துக்குள்ளானவர் 37 வயதுடைய ஒருவராவார். விபத்துக்குள்ளான நபர் பதுளை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ உள்ளிட்ட வைத்தியக் குழுவினர், அந்த இரும்புக் கம்பியின் ஒரு பகுதியை வெட்டி அகற்றிவிட்டு, காயமடைந்தவரை அவசர அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், வைத்தியர்கள் […]