அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது – நாமல் எம்.பி
தேசிய மக்கள் சக்தி அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டினார். ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைகே கூறினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது:- “உலக சந்தை விலையை விட ஒரு பீப்பாய்க்கு 45 டொலர் மேலதிகமாகச் செலுத்தி எரிபொருள் கொள்வனவு செய்யப்படுகின்றது. நட்பு நாடுகளுடன் பேசி குறைந்த விலைக்கு எண்ணெய் பெறுவோம் எனக் […]
நோயாளர் காவு வண்டி தட்டுப்பாட்டினால் பறிபோன உயிர்; வட்டுக்கோட்டையில் சம்பவம்

நோயாளி ஒருவரை யாழ். போதனைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் இடம்பெற்றதாக சட்டத்தரணி எம்.தாட்சாயினி தெரிவித்துள்ளார். நேற்று, வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வட்டுக்கோட்டை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றது. அந்த விபத்தில் காயமடைந்தவரை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை […]
முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா?

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா என்று சமூக மற்றும் சமய மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை ரோஹான் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் திகதி நெருங்கும் போது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான நீதி மற்றும் விசாரணைகள் குறித்து சமூகத்தில் ஒருவித பதற்றமும் எதிர்பார்ப்பும் தானாகவே உருவாகின்றது. கடந்த ஏழு வருடங்களாக […]
சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா காட்டுப்பகுதியில் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். அத்துடன் நேற்றுமுன்தினம் ஐந்து பெரல் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். திருகோணமலை பொலிஸ் பிரிவின் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, ஐந்து பெரல்களில் இருந்த 324 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கன்னியா ஆறாம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர் […]
இலங்கை – இந்திய கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், தற்போது நடைமுறையிலுள்ள பல கலாசாரத் திட்டங்களின் முன்னேற்றம் […]
மரப்பலகைகளின் நடுவில் மகோகனி பலகைகளை கடத்தி சென்றவர்கள் கைது

சப்பு மற்றும் இலவன் மரப்பலகைகளின் நடுவில் மிகவும் சூட்சுமமான முறையில் நுட்பமாக மறைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான மவோகனி மரப்பலகைகளை அனுமதி பத்திரமின்றி ஏற்றிவந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, மரப்பலகைகளை ஏற்றிவர பயன்படுத்திய லொறியினை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். கேகாலை பகுதியில் இருந்து ஹட்டன் குடாகம பகுதியில் உள்ள மர ஆலை ஒன்றிற்கு அனுமதியின்றி மோசடியாக கடத்தப்பட்ட அ மகோகனி மரப்பலகைகளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹட்டன் குடாகம பகுதியில் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் […]
கனடா – பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதம்!

பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன் என்று ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், “இந்த நினைவுச் சின்னம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூரும் புனித இடமாகவும், உயிர் தப்பியோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலின் அடையாளமாகவும் உள்ளது. இதனை சேதப்படுத்தியிருப்பது மிகவும் வெறுக்கத்தக்க செயல்” என தெரிவித்துள்ளார். தென் ஆசியாவிற்கு வெளியே மிகப்பெரிய தமிழ் சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படும் கனடா […]
சந்தையில் அரிசி முதல் மீன் வரை விலை உயரும் அபாயம்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், சந்தையில் ஏனைய அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் கணிசமாக உயரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். கொழும்பில் நேற்று(22.3.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, எரிபொருள் விலை அதிகரிப்பால் இடைத்தரகர்களின் போக்குவரத்துச் செலவுகள் உயர்வடையும்.இதன் நேரடி விளைவாகச் சந்தையில் அரிசியின் விலை பெருமளவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதேபோன்று, மீன்பிடிப் படகுகளுக்கான எரிபொருள் செலவு […]
முச்சக்கர வண்டி ஒன்றில் தீ விபத்து

மூதூர் – அறபாநகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) முச்சக்கர வண்டி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பூரிலிருந்து மூதூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, குறித்த முச்சக்கர வண்டியில் திடீரென தீப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக ஒன்று திரண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, குறுகிய நேரத்திலேயே அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், தீ விபத்தால் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளது. தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.