அடிப்படை மனித உரிமை சுத்தமான குடிநீர்; இன்று உலக தண்ணீர் தினம்!

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி, 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் திகதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. […]
இன்று 90 வீத தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது?

சுமார் 90 சதவீத தனியார் பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரலாற்றிலேயே மிக அதிக சதவீதத்தில் எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், ஜெமுனு விஜேரத்ன, நேற்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று தாங்கள் முடிவு செய்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். அதற்கமைய, புதிய பேருந்துக் கட்டணத் திருத்தத்துடன் பேருந்துகளை இயக்க […]
ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணம்: வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 33 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்த அணி சார்பில் சங்கீத் 60 பந்துகளில் 45 ஓட்டங்களையும், உ.கென்றிக்சன் 51 பந்துகளில் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் புனித பத்திரிசியார் கல்லூரி சார்பாக ம.ஸ்ரிப் ஆதித்யா […]
வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும். […]
ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால் ஈரானின் சகல மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் – ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தனது ‘Truth Social’ சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்தப் பதிவை இட்ட நேரத்திலிருந்தே இந்த 48 மணிநேரக் காலக்கெடு ஆரம்பமாவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மார்ச் 21 ஆம் திகதி GMT நேரப்படி 23:44 மணிக்கு இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். இதன்படி, […]
பெண்ணைக் கிணற்றில் வீசிய தம்பதி கைது!

மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர் மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம், காஞ்சிரங்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மற்றும் ஒரு இளைஞன் என மூவர் நேற்று (21) இரவு வவுணதீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை வவுணதீவிலிருந்து […]
இஸ்ரேலில் 100 பேர் வரை காயம்

இஸ்ரேலின் ஆர்ட் மற்றும் டிமோனா ஆகிய இரு நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 01.20 மணியளவில் ஆர்ட் நகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாத்திரம் 88 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், 55 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.