பாராளுமன்றில் ஜனாதிபதியின் விசேட உரை

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபை முதல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்திருந்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதி மட்டத்தில் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வெள்ளிக்கிழமை வழங்கவும் […]

இன்று மழைக்கு வாய்ப்பு

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் […]