அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்

இலங்கைத்தீவு சர்வதேச வல்லரசுகளின் பூகோள ஆதிக்கப் போட்டிக்குள் சிக்குண்டுள்ளதால், அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஷ் தெரிவித்தார். தியாக தீபம் அன்னை பூபதியின் 38-வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் நேற்று வியாழக்கிழமை (19) சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் தொடக்கத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில் […]

இலங்கை வருகிறது சர்வதேச நாணய நிதியக்குழு

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கொள்கை ரீதியான கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. அந்த குழுவானது 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் 9 வரை இலங்கையில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் ஊடாக, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் 5-வது மற்றும் 6-வது மீளாய்வுகளை ஒன்றிணைத்து நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் இன்னும் சிக்கலா?

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) முறைமையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக புதிய உடனடி உதவிச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும் போதோ அல்லது முறைமையைப் பயன்படுத்தும் போதோ எதிர்கொள்ளும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் தடைகளை விரைவாகத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி, வாகனங்களைப் பதிவு செய்யும் போது ஏற்படும் ஏதேனும் சிக்கல்களுக்கு உதவி பெறுவதற்கு 076 019 1919 என்ற இலக்கத்திற்கு WhatsApp ஊடாகச் செய்தியொன்றை அனுப்ப முடியும் […]

எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய முக்கிய கலந்துரையாடல்

வலுசக்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக வலுசக்தி விநியோகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதால், உலக நாடுகள் […]

ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

வரெலியா – சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில், அதிவேகமாக வந்த கார் ஒன்றினால் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையை முச்சக்கர வண்டி ஒன்று கடக்க முயன்றபோது, வலது திசையிலிருந்து மிக அதிக வேகத்துடன் வந்த கார் ஒன்று மோத முற்பட்டது. எனினும், முச்சக்கர வண்டி ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் அதிர்ஷ்டவசத்தாலும் முச்சக்கர வண்டியில் […]

புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டுசெல்லவிருந்த பாலைமரகுற்றிகள் மடக்கிப்பிடிப்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக கனரக வாகனத்தில் எந்தவித அனுமதி பத்திரமும் இன்றி A35 பிரதான வீதி ஊடாக மரக்கடத்தல் நடைபெறுவதாக கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலுக்கு அமைவாக நேற்று(19) அதிகாலை 3.00 மணியளவில் தர்மபுரம் பொலிஸாரின் திடீர் வீதிச் சோதனை மூலம் 40 லட்சம் ரூபாய் பெறுமதி மிக்க பாலைமரக்குற்றிகள் புளியம்பொக்கனை பகுதியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டது. குறித்த சம்பவத்தின் தொடர்புடைய […]

வட மாகாண சிங்கள மக்களின் உரிமைகள் சரியாக வழங்கப்பட வேண்டுமென போரணி

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும் என கோரிய போரணி ஒன்று நேற்று(19) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை நடைபெறும் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஊடாக குறித்த பேரணி இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நாகவிகாரையில் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான பேரணி ஆளுநர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. கடந்த 78 ஆண்டுகளாக பல்வேறு அரசுகள் நாட்டில் ஆட்சி செய்தபோதிலும், வடக்கில் வாழும் சிங்கள மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எனவும் […]

அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் நேற்று (19) கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் மற்றும் ஏனைய விவசாய அமைப்புகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைப் பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவிக்கும் விவசாயிகள், இதனை முறையாக விசாரிக்குமாறு ஜனாதிபதி […]

அனுமதிப்பத்திரம் இன்றி பெற்றோலை வைத்திருந்தவருக்குச் சிறை

பெற்றோல் விற்பனை செய்வதற்கான முறையான அனுமதிப்பத்திரம் இன்றி, லொறி ஒன்றில் 65 லீட்டர் பெற்றோலை வைத்திருந்த நபருக்கு 2,500 ரூபாய் அபராதமும் 2 மாத கால கட்டாயச் சிறைத் தண்டனையும் விதித்து கல்கிசை நீதவான் பசான் அமரசேன நேற்று உத்தரவிட்டார். கல்கிசை, படோவிட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இருந்து அதிகளவு எரிபொருளைப் பெற்றுக்கொண்டதாக வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அந்த எரிபொருள் […]

எரிசக்தி விலை உயர்வு; மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்துள்ளதாவது, சில சந்தர்ப்பங்களில், எரிவாயுவை விட மின்சாரத்திற்கு 15 மடங்கு வரை அதிக வரி விதிக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க முடியாது. மின்சார வரி விகிதங்களைக் குறைக்கவும், எரிபொருட்களை விட மின்சாரத்திற்கு குறைந்த […]