அமெரிக்க விசேட பிரதிநிதி ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் (Sergio Gor) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் அந்தப் போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் […]

கனேடிய அரசின் புதிய உத்தரவாதம்!

ஒன்டாரியோ – கனடாவின் கூட்டாட்சி அரசு புதிய சேவை தரநிலையை அறிவித்துள்ளது. இதன் படி, 2026 ஏப்ரல் 1 முதல், முழுமையான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் 30 வேலை நாட்களுக்குள் செயலாக்கப்படும். அவ்வாறு செய்யப்படாவிட்டால் அது இலவசமாக வழங்கப்படும். புதிய கொள்கையின் கீழ், சிறப்பு சேவை கனடா மையங்களில் தேவையான அனைத்து ஆவணங்களுடனும் விண்ணப்பிக்கும் நபர்கள், 30 வேலை நாட்களை மீறி செயலாக்கம் தாமதமானால், கடவுச்சீட்டு கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவார்கள். இது கனடியர்களை முதன்மையாகக் கருதும் நடவடிக்கை […]

ஒரே இரவில் மூன்று வீடுகளில் கொள்ளை: நால்வர் கைது

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் மூன்று வீடுகளை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (19.3.2026) அதிகாலை சுமார் 2.30 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் ஜன்னல் கம்பிகளை அகற்றி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். முதல் வீடு: சுமார் 10 பவுன் […]

கேகாலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கேகாலை – ஹேனகந்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம்(18) கெஹெல்வத்தை பகுதியிலிருந்து தந்தெனிய பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், ஹேனகந்த பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 40 வயதுடைய நபர் பலத்த காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட […]

உலக முடிவில் விழுந்த யாழ். பல்கலைக்கழ மாணவி

நுவரெலியா, ஹோட்டன் சமவெளி (Horton Plains) பகுதியில் சுற்றுலா மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்றபோது சுமார் 40 மீற்றர் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து சுற்றுலா வந்திருந்த மாணவ, மாணவிகள் இன்று காலை 9:50 மணியளவில் ஹோட்டன் சமவெளிப் பகுதியைச் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது ‘உலக முடிவு’ (World’s End) என அழைக்கப்படும் பகுதியில், 23 வயதுடைய வர்சனி சிவகுமார் எனும் மாணவி புகைப்படம் எடுக்க முயன்ற […]

கனேடிய மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

கனேடிய மத்திய வங்கி (Bank of Canada) தனது முக்கிய வட்டி விகிதத்தை (Policy Interest Rate) மாற்றமின்றி 2.25% என்ற அளவிலேயே தக்கவைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாக ஏழு முறை வட்டி விகிதங்களைக் குறைத்து வந்த கனேடிய மத்திய வங்கி, தற்போது அந்த வேகத்தைக் குறைத்து காத்திருந்து கவனிக்கும் […]

நடிகர் விஜய் தேர்தலில் நிற்க முடியாது?

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் போதும்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது. கரூர் நெரிசல் விவகாரம், ஜனநாயகன் பட விவகாரம், சங்கீதா விவாகரத்து விவகாரம் என அடுத்தடுத்து சிக்கல்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில், சங்கீதாவின் விவாகரத்து பிரச்சினையால் விஜய் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படலாம் என சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய், தற்போது பல பக்கங்களில் […]

அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்

இலங்கைத்தீவு சர்வதேச வல்லரசுகளின் பூகோள ஆதிக்கப் போட்டிக்குள் சிக்குண்டுள்ளதால், அரசுகளாலும் வல்லரசுகளாலும் தமிழர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஷ் தெரிவித்தார். தியாக தீபம் அன்னை பூபதியின் 38-வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் நேற்று வியாழக்கிழமை (19) சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் தொடக்கத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில் […]

இலங்கை வருகிறது சர்வதேச நாணய நிதியக்குழு

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கொள்கை ரீதியான கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. அந்த குழுவானது 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் 9 வரை இலங்கையில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் ஊடாக, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் 5-வது மற்றும் 6-வது மீளாய்வுகளை ஒன்றிணைத்து நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் இன்னும் சிக்கலா?

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) முறைமையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக புதிய உடனடி உதவிச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும் போதோ அல்லது முறைமையைப் பயன்படுத்தும் போதோ எதிர்கொள்ளும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் தடைகளை விரைவாகத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி, வாகனங்களைப் பதிவு செய்யும் போது ஏற்படும் ஏதேனும் சிக்கல்களுக்கு உதவி பெறுவதற்கு 076 019 1919 என்ற இலக்கத்திற்கு WhatsApp ஊடாகச் செய்தியொன்றை அனுப்ப முடியும் […]