நாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பற்றதாக செயல்பட வேண்டும்
லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாதிரியும் செயற்பட முடியாது. அத்துடன் நாட்டில் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியே இதற்கு காரணமாகும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான […]
புகையிரத சேவைகளை உடனடியாக வலுப்படுத்துமாறு கோரிக்கை

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் இலங்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, பொதுப் போக்குவரத்து சேவைகளையும், குறிப்பாக புகையிரத சேவையையும் உடனடியாக வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் புகையிரத திணைக்களத்திற்கு விசேட கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளதுடன், விநியோகப் பாதைகளிலும் தடைகள் […]
மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக வேண்டும் என்று எதிர்க்கட்சி விரும்புகின்றது; ஆனால் அது ஒருபோதும் நடக்காது

ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால் அன்று கியூ.ஆர் முறைமை அமுல்படுத்தப்பட்டது.இரண்டு தலைவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் இன்று பொருளாதார முன்னெற்றத்துக்கு மத்தியில் க்யூ ஆர் முறைமையை அமுல்படுத்த நேரிட்டுள்ளது.மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகாதா,என்று எதிர்க்கட்சியினர் பிரார்த்தனை செய்கிறார்கள்.இவர்களின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது. பூகோள காரணிகளால் ஏற்பட்ட நெருக்கடியை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது […]
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவிடம் இரு மணிநேரம் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடித் தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை (17) அவரிடம் விசேட விசாரணை ஒன்றினை நடத்தியது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, செவ்வாய்க்கிழமை முற்பகல் கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் விசாரணைகளை நடத்தியதாக குறித்த […]