பம்பரக்கலை கிராமத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள்

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான ‘நாட்டை மேம்படுத்தும் அழகான கிராமம்’ எனும் கருப்பொருளின் கீழ், நுவரெலியா மாவட்டத்தின் பம்பரக்கலை கிராமத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் முக்கிய நிகழ்வாக, பம்பரக்கலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் புதிய கலாச்சார மண்டபம் ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா திங்கட்கிழமை (16.03.2026) காலை 8:30 மணியளவில் உத்தியோகபூர்வமாக நடைபெற்றது. இக்கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் […]
காபூல் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் : 400 பேர் பலி

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளுக்கு இடையே கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வரும் மோதல், தற்போது பெரும் மனிதநேயப் பேரழிவாக மாறியுள்ளது. காபூலில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு சிகிச்சை மருத்துவமனை (Omar Addiction Treatment Hospital) மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. காபூல் நேரப்படி திங்கட்கிழமை இரவு 9:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2,000 படுக்கை வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையின் பெரும் பகுதி தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக […]
300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் பாதிப்பு

இலங்கையில் இரு பிரதான நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேபிள் தொலைக்காட்சி சேவை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமக்கான நீதியை அரசாங்கம் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அகில இலங்கை கேபிள் டிவி ஓப்பரேட்டர்கள் சங்கப் பிரதிநிதிகள் இவ்விடயத்தைத் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “சுமார் இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பாகங்களிலும் நாம் […]
முல்லைத்தீவு – துணுக்காய் கோட்டை கட்டியகுளம் வித்தியாலயத்திற்கு ரவிகரன் விஜயம்

முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலயத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாக சென்று, அங்கு நிலவும் குறைபாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார். பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நீண்டகாலத் தேவைகள் குறித்துக் கேட்டறிந்துகொண்டார். இந்தச் சந்திப்பின் போது, பாடசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் செயல்பாடுகள் சார்ந்த பின்வரும் குறைபாடுகள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன: ஆசிரியர் பற்றாக்குறை: […]
ஸ்டாலின் – விஜய் இடையே கடும் போட்டி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களத்தின் தற்போதைய நிலவரம் குறித்த முக்கியக் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் (IPTS) நடத்திய இந்த ஆய்வில், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் புதிய அரசியல் வருகையான நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் இடையே சமமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த முதலமைச்சராக வருவதற்கு யாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு, மக்கள் வழங்கிய ஆதரவின் அடிப்படையில் […]
ஹெரோயின் போதைப்பொருளை தேயிலைப் பைகளில் மறைத்து கடத்தல்

தேயிலைப் பைகளில் மறைத்து ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ் வழக்கு நேற்று திங்கட்கிழமை (16) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை சந்தேக நபரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் […]
முல்லைத்தீவு- குருந்தூர் மலையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து பௌத்த துறவிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ள விசேட நடைப்பயண யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 14.03.2026 அன்று முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையிலிருந்து இந்த யாத்திரை ஆரம்பமானது. ஹிறிகத்பவன் வெவ உப நிதாலங்கார பௌத்த மதகுருவின் தலைமையில், 6 பௌத்த துறவிகள் மற்றும் 10 பேர் அடங்கிய சிவில் சமூகத்தினர் இந்த ஆன்மீக நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர். நீண்ட தூர நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள இக்குழுவினர், நேற்று (16) இரவு […]
எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்?

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். இன்று (17) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “இதுவரை ஒரு மணிநேரம் கூட மின்வெட்டு இன்றி நாம் கொண்டு செல்கிறோம், ஆனால் […]
எரிபொருள் கையிருப்பு விபரம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ள காலம் குறித்த விபரத்தை வெளியிட்ட அமைச்சர் சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) வெளிப்படுத்தினார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி இதனைக் குறிப்பிட்டார். 92 ரக பெற்றோல் – ஏப்ரல் 23 ஆம் திகதி வரை 95 ரக பெற்றோல் – மே 10 ஆம் திகதி வரை டீசல் – ஏப்ரல் 12 ஆம் […]