இலங்கையின் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு சுகாதார அமைச்சர் விஜயம்!

கண்டி, பல்லேகலே முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள இலங்கையின் பெரிய அளவிலான இரண்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களான ‘கெலும் லைஃப் சயின்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ மற்றும் ‘செலஜென் லங்கா (பிரைவேட்) லிமிடெட்’ ஆகியவற்றின் உற்பத்தித் தொழிற்ச் சாலைகளுக்கு சுகாதார, வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது சுமார் 400 ற்கும் மேற்பட்ட மருந்து வகைகளை உற்பத்தி செய்கின்றன, மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தரநிர்ணய […]
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அச்சுறுத்தல் – ஐ.நா தூதர்

ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு வலுவான நிலையில் உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப்பின் ஐ.நா தூதரான மைக் வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பது என்பது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஈரானின் செயல்பாடுகளையும், அவர்கள் எல்லா திசைகளிலும் தாக்குதல் நடத்துவதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை அவர்கள் அணு […]
வலுசக்தி விநியோகக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் நடைபெற்றது. மத்திய கிழக்குப் போரினால் நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் உள்ளிட்ட வலுசக்தி விநியோகக் கட்டமைப்புக்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் அந்தத் தடைகளை எதிர்கொண்டு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு துறையினராலும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மாற்று வழிகள் குறித்து இதன்போது மீளாய்வு […]
பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் பாடசாலை விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர்

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது எவ்விதத் தயக்கமுமின்றி அவற்றை ஏற்றுப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், 2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஹம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த […]
எரிபொருள் நெருக்கடி; நான்கு நாள் வேலை வாரம்?
இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மாற்று தீர்வாக வாரத்தில் நான்கு நாள் வேலை முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று திங்கட்கிழமை(16) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசுத் துறைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து […]