மின்சார உற்பத்திக்கு அச்சுறுத்தல்?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம், இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்த கவலை எழுந்துள்ளது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக ஓடர் செய்யப்பட்ட 25 நிலக்கரி கப்பல்களில், ஏற்கனவே தரம் குறைந்த நிலக்கரியைக் கொண்டு வந்த 12 கப்பல்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச கடல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் […]
போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைதானவர்களின் விபரங்கள் வெளியீடு

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த 10 சந்தேக நபர்களுக்கும் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் நாட்டின் தெற்கு கடற்பரப்பில் வைத்து இந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றிலிருந்து 654 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குறித்த போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் 10 சந்தேக நபர்களையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். கடற்படையினரால் ஆழ்கடலில் வைத்து 5 சந்தேக நபர்களுடன் […]
வெப்பமான வானிலை; பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். வெப்பமான வானிலையினால் ஏற்படும் சுகாதார அபாயங்களைக் குறைப்பது எப்படி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று(13) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் […]
வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் வலுவாக இருந்தால் தோல்வியால் உங்களை வெல்ல முடியாது – சிறீதரன் எம்.பி

வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் வலுவாக இருந்தால், தோல்வியால் உங்களை ஒருபோதும் வெல்ல முடியாது. ஆகவே, கல்வியைச் சுமையாகக் கருதாமல் உங்கள் சிறகுகளை விரிப்பதற்கான சக்தியாகப் பாருங்கள்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், “கல்வி என்பது வெறும் மதிப்பெண்களைப் பெறுவது […]
கனடாவில் பிளாஸ்மா வழங்கிய பின் நால்வர் உயிரிழப்பு – சுகாதார அமைப்பு தகவல்

கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் பிளாஸ்மா வழங்கிய பிறகு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நால்வரில் மூவர் மணிடோபா மாகாணத்தில் உயிரிழந்ததாக ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது. இந்த தகவல், அந்த உயிரிழப்புகளில் இரண்டு சம்பவங்கள் கூட்டாட்சி கட்டுப்பாட்டு அமைப்புக்கு நான்கு மாதங்களுக்குள் அறிவிக்கப்பட்டதாக சிபிசி நியூஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்ததையடுத்து வெளியாகியுள்ளது. அவற்றில் ஒன்று அக்டோபரில் நடந்தது; மற்றொன்று ஜனவரி 30 அன்று இடம்பெற்றது. நான்கு உயிரிழப்புகளில் ஒன்று கியூபெக்கில் இடம்பெற்றதாகவும் ஆனால் அந்த சம்பவம் எப்போது […]
17ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்
மார்ச் மாதத்துக்கான இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளன என்று நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வுகளில் நாட்டின் தற்போதைய நிலவரங்களுக்குத் தேவையான சில முக்கிய சட்டமூலங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளன. அத்துடன், தினமும் […]
அமெரிக்காவின் முடிவால் சீனா கடும் அதிருப்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சீனப் பயணத்தை முடித்த பிறகு, தாய்வானுக்குப் புதிய ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான ஒப்புதலை வழங்க வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், டிரம்பின் பெய்ஜிங் பயணத்திற்குப் பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்வானின் தற்காப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆயுத விற்பனை அமையவுள்ளது, இதில் ஏவுகணை அமைப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட போர் கருவிகள் இடம்பெறக்கூடும் […]
தலதா அத்துகோரள அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டு

நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை எவ்விதத் தலையீடுகளுமின்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தற்போதைய அரசு அரச நிறுவனங்களுக்குத் தமக்குச் சாதகமானவர்களைத் தலைவர்களாக நியமித்து, அவர்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றது. தேவையற்ற விதத்தில் அனைவர் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனநாயகக் கட்டமைப்புக்கு உட்பட்டு அனைத்துத் தலைவர்களும் செயற்பட்டமையாலேயே, 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய ஆட்சியாளர்களால் அதிகாரத்துக்கு […]
போரில் ஈடுபட்டு பெருந்தொகை பாவிகள் பணத்தை விரயமாக்குகின்றனர்

பாவிகள், போரில் ஈடுபட்டு பெருந்தொகை பணத்தை விரயமாக்குவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பாவிகள், போரைத் தொடுப்பதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் பட்டினியை போக்கக்கூடிய செல்வத்தை அழிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ராகம தேவாலயத்தில் நடைபெற்ற விசேட திருப்பலி ஆராதனைகளின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த உலகில் வாழும் பெருந்தொகை மக்களின் பட்டினியை நீக்கக் கூடிய பாரியளவு செல்வத்தை போரிற்காக விரயமாக்குகின்றனர் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய […]
உலக நடப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் அரசாங்கத்திற்கு கிடையாது

பொருட்கள் மற்றும் சேவைகள் பயன்பாட்டை வரையறுத்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆளும் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஆளும் கட்சியின் பொதுச் செயலாளரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். எதிர்க்கட்சியில் இருக்கும்போது பொருட்கள் விலை குறைக்கப்பட வேண்டும் என பேச்சு வார்த்தை நடத்திய போதிலும் தற்போதைய அரசாட்சியில் உலக நடப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது உலக அளவில் நிலவிவரும் […]