அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராகும் ஈரான்

ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கருதப்படும் கார்க் (Kharg) தீவு மீது அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது. கார்க் தீவிலுள்ள ஒவ்வொரு இராணுவ இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் 5 மைல் நீளம் கொண்ட இந்த சிறிய தீவு, ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. கார்க் தீவு அந்நாட்டின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாகக் கருதப்படுவதுடன், இது ஈரானின் ‘பெட்ரோலிய உயிர்நாடி’ என்றும் […]

இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி முக்கிய அறிவிப்பு

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டு பிரதமர் ஜோர்ஜியா மெலோனி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இத்தாலி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த தீர்மானத்தை வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இத்தாலியப் படைகளை அங்கிருந்து முழுமையாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் மோதல்களில் இத்தாலி […]

கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய விமானப் படை தெரிவித்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தாக்குதல்களைத் தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதில் தாக்குதல்களைத் தொடங்கியது. கடந்த 14 நாள்களாக இரு தரப்பும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலிய விமானப் படை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் மேற்கு […]

ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் மீண்டும் பேச்சு

ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் மீண்டும் தொலைபேசியில் பேசியுள்ளேன் எனவும் இரு தரப்பு உறவு குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தாக்குதலை நடத்தின. இதையடுத்து, இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் தாக்குதலை தொடங்கியது. இரு தரப்புக்கும் இடையேயான மோதல் 14 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்தத் தொடர் மோதல் […]

கமேனி பற்றிய தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பணப்பரிசு – அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி வெகுமதி வழங்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதேபோல், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து முன்னெடுக்கும் போருக்காக மேலதிகப் படைகள், கரையோர பாதுகாப்பு சிப்பாய்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பவும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதேவேளை, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள […]

திரு திருநாவுக்கரசு கிருபாகரன்

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காயை வதிவிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு கிருபாகரன் அவர்கள் 11-03-2026 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சிவலோகநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபாசினி அவர்களின் அன்புக் கணவரும், மாதுரி அவர்களின் அன்புத் தந்தையும், ஐங்கரன், கருணாகரன், கவிதா, சிவாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ,பிரேமலதா அபர்ணா, கேதீஸ்வரன் அர்ப்பணா, வின்சன், நந்தகுமார், சியாமினி, கார்த்திகா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சங்கீத் […]

அநுர ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள் இது வெறும் பகற்கனவே!

“அநுர ஆட்சியை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள். இது வெறும் பகற்கனவே. மக்கள் எம் பக்கமே.” – என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார். காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எந்திரி ஜி.அருணன் ஏற்பாட்டில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கூட்டம் அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி. தலைமையில் இடம்பெற்றது. “டித்வா பேரிடரில் பாதிக்கப்பட்ட எமது […]

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் புதிய செய்தி

உலகில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக நாட்டில் அதிகரித்துள்ள எரிபொருள் விலைகளை அரசாங்கம் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார். இது நிரந்தர விலை உயர்வு அல்ல என்றும், எந்தவொரு பேரழிவு சூழ்நிலையிலும் மக்களை சிக்கித் தவிக்க விடாத மக்கள் அரசாங்கம் தற்போது செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் வரிசைகள் குறித்து தேவையற்ற அச்சத்தை உருவாக்கி மக்கள் […]

கனடா – பிரான்ஸ்; வர்த்தக கொண்டாட்டங்கள்

ஆண்டுதோறும் நடைபெறும் கனடா – பிரான்ஸ்; வர்த்தக கொண்டாட்டங்கள் மற்றும் வணிக விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டமை பெருமையளிப்பதாக ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஒன்ராறியோ மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களுக்கிடையேயான வலுவான பொருளாதார உறவுகளை கொண்டாட மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இருபுறமும் சுமார் 5 பில்லியன் டொலர் வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில், இந்த உறவு இரு தரப்பிலும் வேலை வாய்ப்புகளையும் புதிய சந்தர்ப்பங்களையும் உருவாக்கி […]

மொன்ரியல் நகர கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்; வன்கூவரில் ஒரு பெண்ணைக் குத்திக்கொன்றவர்?

வன்கூவரில் இரண்டு குழந்தைகளின் தாயை குத்திக்கொன்ற 35 வயதான மொன்ரியல் நபர், பிளாட்டோ மொன்ரோயல் பகுதியில் உள்ள ஒரு dépanneur (சிற்றங்காடி) கடையில் நடந்த கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டு முதல் நிலை கொலை குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. சேவியர் ஜெலாட்லி (Xavier Gellatly) க்யூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய இரு மாகாணங்களிலும் நீண்ட குற்றப் பின்னணியை கொண்டவர். அவரது பதிவுகளில் பல வன்முறை குற்றங்களுக்கான தண்டனைகளும் உள்ளன. மேலும், அவர் மீண்டும் […]