இலங்கை மத்திய வங்கிக்கு கொழும்பு தலைமை நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு
வெளிநாட்டு நாணய மாற்றுச் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் காரணமாக கிரிப்டோகரன்சிகள் மூலம் இலங்கையின் பணம் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார். மத்திய வங்கியைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த கிரிப்டோகரன்சி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எந்த புரிதலும் இல்லை, இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படுவதாகவும் நீதவான் கூறினார். இந்த சம்பவங்கள் குறித்த விசாரணை நீதிமன்றத்திற்கு மட்டுமே […]
இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

கிளிநொச்சி-இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(12.3.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய கடற்றொழிளார்களையும் தொழிலுக்கு பயன்படுத்திய மீன்பிடி படகினையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
தேசிய வைத்தியசாலை மின்னுயர்த்திக்குள் சிக்கிய நோயாளர்கள்

கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் மின்னுயர்த்தி (Lift) ஒன்று செயலிழந்து , 15 நோயாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் (OPD) அமைந்துள்ள மின்னுயர்த்தி ஊடாக மேல் மாடிக்கு செல்வதற்காக 15 பேர் அதற்குள் ஏறியுள்ளனர். இதன் போது, திடீரென அதன் கதவுகள் மூடப்பட்டு மின்னுயர்த்தி செயலிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு பிரிவினர், மின்னுயர்த்தியின் கதவுகளை உடைத்து அதற்குள் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
திடீர் சுற்றிவளைப்பு; கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை

மண்முனை பாலத்திற்கு அருகாமையில் உள்ள தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, கோடா மற்றும் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமான முறையில் கசிப்பு தயாரிப்பதாக பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே, கொக்கட்டிச்சோலை பொலிஸார் வியாழக்கிழமை (12) அன்று குறித்த சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளனர். இதன்போது, இரண்டு பீப்பாய்கள் (Barrels) , இரண்டு கலன்களில் வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா, 67,500 மில்லி லீட்டர் […]
விபத்தில் பிரதி அதிபர் பலி

எம்பிலிபிட்டிய – கொழும்பு பிரதான வீதி, பெல்மதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாத்தக்கடை பகுதியில், இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி புனித லூக்ஸ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபரான 52 வயதுடைய அமில தண்டக்கார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டிற்கு தேவையான இரவு உணவை, அருகில் உள்ள உணவகத்தில் வாங்கிக்கொண்டு, வீதியோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக […]
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல இந்திய கப்பல்களுக்கு அனுமதி

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் போர்ப் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்தியாவில் எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது உட்பட பல்வேறு காரணங்களைக் காட்டி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா […]
மதுவரி திணைக்கள 7 அதிகாரிகள் மீது மனித உரிமை மீறல் வழக்குப்பதிவு
மிதிகம பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரைத் தாக்கித் துன்புறுத்தியதன் மூலம், மதுவரி திணைக்களத்தின் 7 அதிகாரிகள் அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் நேற்று (12) தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் தலா 75,000 ரூபாய் வீதம், ஏழு அதிகாரிகளும் இணைந்து தமது தனிப்பட்ட பணத்திலிருந்து மொத்தம் 525,000 ரூபாய் நஷ்டஈட்டை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நஷ்டஈட்டுத் தொகையை, தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியிலிருந்து 3 மாதங்களுக்குள் செலுத்தி முடிக்க […]
இந்தியா சாதகமான பதில்

இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் விடுத்த கோரிக்கைக்கு இந்தியாவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் எரிசக்தித் தேவைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அமைச்சர் விஜித ஹேரத் கடந்த மார்ச் 06 ஆம் […]
இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான […]
விமான சேவைகள் நிறுவன அதிகாரி கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் நேற்று(12) கைது செய்யப்பட்டார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகினார். இந்நிலையில் அவரிடம் 7 மணிநேரத்திற்கு அதிக காலம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டமை […]