அமெரிக்க விமானம் ஈராக்கில் வீழ்ந்தது

மேற்கு ஈராக்கில் ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில் எரிபொருள் மீள்நிரப்பு விமானமொன்று வியாழக்கிழமை(12) வீழ்ந்துள்ளது. இன்னொரு விமானமும் சம்பந்தப்பட்ட இச்சம்பவமானது தாக்குதலால் இடம்பெறவில்லை என ஐ. அமெரிக்க மத்திய கட்டளை மய்யம் தெரிவித்துள்ளது. இரண்டாவது விமானமானது பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளது. வீழ்ந்த விமானத்தில் ஆறு படையினர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விமானம் வீழ்ந்ததுக்கு ஈராக்கிலுள்ள ஈரானிய ஆதரவு ஆயுதக் குழுக்களின் கூட்டணி உரிமை கோரியுள்ளது.
ஈரான் புராதன இடங்கள் சேதம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28ம் தேதி போர் தொடுத்தன. இதில் இராணுவ தளங்கள், ஆயுத கிடங்குகள் பாதிக்கப்பட்டதோடு, ஈரான் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் புராதன இடங்களும் சேதம் அடைந்துள்ளன. ஐநாவின் விதிகளை மீறி டெஹ்ரானில் உள்ள கோலெஸ்தான் அரண்மனை, இஸ்பஹான் நகரில் உள்ள 17-ம் நூற்றாண்டு செகல் சோடோன் அரண்மனை, ஈரானின் மிக பழமையான இ-ஜமே மசூதி ஆகியவையும் சேதம் அடைந்துள்ளன. கொரம்மாபத் பள்ளத்தாக்கு பகுதியில் கட்டடங்கள் குகைகள் ஆகியவை பலத்த சேதம் […]
ஏப்ரலில் செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்றையதினம்(12) யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது, புதைகுழியை சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டுள்ளது. அத்துடன் புதைகுழி பகுதியில் அகழ்வு பணிகளில் ஈடுபடுவர்களுக்காக மற்றும் பொருட்களை வைப்பதற்காக […]
சி.ஐ.டி.க்கு மாறுகிறது அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு வழக்கு!

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை நேற்று(12.03.2026) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்டது. […]
மீண்டும் இலங்கையில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை?

சமகால நெருக்கடியை எதிர்கொண்டு உலகின் பல நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நாடியுள்ளன. இந்நிலையில் அதனை இலங்கையில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வணிக மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் தேவைப்பட்டால், அது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். எரிசக்தியைப் பாதுகாத்து மக்கள் முன்னேறக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் பாடுபடும் என அவர் கூறினார். சப்புகஸ்கந்த மற்றும் முதுராஜவெலவில் எரிவாயு கிடங்கு ஒன்றை நிர்மாணிக்கவும் […]
இலங்கை மத்திய வங்கிக்கு கொழும்பு தலைமை நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு
வெளிநாட்டு நாணய மாற்றுச் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் காரணமாக கிரிப்டோகரன்சிகள் மூலம் இலங்கையின் பணம் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார். மத்திய வங்கியைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த கிரிப்டோகரன்சி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எந்த புரிதலும் இல்லை, இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படுவதாகவும் நீதவான் கூறினார். இந்த சம்பவங்கள் குறித்த விசாரணை நீதிமன்றத்திற்கு மட்டுமே […]
இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

கிளிநொச்சி-இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(12.3.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய கடற்றொழிளார்களையும் தொழிலுக்கு பயன்படுத்திய மீன்பிடி படகினையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
தேசிய வைத்தியசாலை மின்னுயர்த்திக்குள் சிக்கிய நோயாளர்கள்

கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் மின்னுயர்த்தி (Lift) ஒன்று செயலிழந்து , 15 நோயாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் (OPD) அமைந்துள்ள மின்னுயர்த்தி ஊடாக மேல் மாடிக்கு செல்வதற்காக 15 பேர் அதற்குள் ஏறியுள்ளனர். இதன் போது, திடீரென அதன் கதவுகள் மூடப்பட்டு மின்னுயர்த்தி செயலிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு பிரிவினர், மின்னுயர்த்தியின் கதவுகளை உடைத்து அதற்குள் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
திடீர் சுற்றிவளைப்பு; கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை

மண்முனை பாலத்திற்கு அருகாமையில் உள்ள தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, கோடா மற்றும் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமான முறையில் கசிப்பு தயாரிப்பதாக பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே, கொக்கட்டிச்சோலை பொலிஸார் வியாழக்கிழமை (12) அன்று குறித்த சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளனர். இதன்போது, இரண்டு பீப்பாய்கள் (Barrels) , இரண்டு கலன்களில் வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா, 67,500 மில்லி லீட்டர் […]
விபத்தில் பிரதி அதிபர் பலி

எம்பிலிபிட்டிய – கொழும்பு பிரதான வீதி, பெல்மதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாத்தக்கடை பகுதியில், இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி புனித லூக்ஸ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபரான 52 வயதுடைய அமில தண்டக்கார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டிற்கு தேவையான இரவு உணவை, அருகில் உள்ள உணவகத்தில் வாங்கிக்கொண்டு, வீதியோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், அவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக […]