தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; இருவர் கைது!
மாத்தறை – திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் பலத்த காயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் பதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் திக்வெல்ல – ரத்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் […]
பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக சூழலை உருவாக்க வேண்டும் – பெண்கள் அமைப்புக்கள்

சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் சமூக மட்டத்தில் சேவைகளை வழங்கிவரும் அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகளை அழைத்து மகளீர் தின கலந்துரையாடல் ஒன்றினை வியாழக்கிழமை (12) ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள். உரிமைகள் – நீதி – செயல் என்ற கருப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலில் அங்கவீனமான பெண்கள் அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,மற்றும் நில ஆக்கிரமிப்பினால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், நுண்நிதி கடனினால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசாங்கம் கொண்டுவரும் திட்டங்களால் […]
விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு: 586 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (12) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 586 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,726 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 295 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 176 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 266 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 59 பேரும் பொலிஸாரால் […]
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து இணையத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல விடுத்துள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் விசேட சலுகைகள் பணப்பரிசுகள் அல்லது விளம்பரச் சலுகைகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் […]
பஸ் மோதி பெண் உயிரிழப்பு!
தங்கல்லை – ரன்ன வீதியின் நெடொல்பிட்டிய பகுதியில் பஸ் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (12) பகல் தங்கல்லையிலிருந்து ரன்ன நோக்கி பயணித்த பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த பஸ்ஸிலிருந்து பயணிகள் இறங்கிய பின்னர், பஸ் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த வேளையில், வீதியை கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் நெடொல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என […]
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கௌரவம்!

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள், மன்றத்தின் தலைவி ஷண்முகப்பிரியா கார்த்திகேசு தலைமையில் கிறேஹெட் தமிழ் வித்தியாலய உடஹெந்தென்ன பாடசாலை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘டித்வா’ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான தொலஸ்பாகே, மாரிவெல மேல் பிரிவு, மாரிவெல கீழ் பிரிவு, பரகல மேல் பிரிவு, பரகல கீழ் பிரிவு, கலமுதுன மற்றும் ரெக்சாவ ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற சுமார் நூறு பெண்களும் ஐம்பது மாணவிகளும் கலந்துகொண்டனர். மகளிர் தினத்தை […]
சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகை!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்து வந்த பல வணிக நிலையங்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன், பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று வியாழக்கிழமை (12) இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் அனுமதியின்றி இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் யாழ்ப்பாண பொலிஸார் இந்தச் சுற்றிவளைப்பை […]
அரச அலுவலர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

அரச அலுவலர்கள் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவர்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே அறிவுறுத்தியுள்ளார். சமூக சக்தி (பிரஜாசக்தி) வறுமையை ஒழிப்பதற்கான தேசிய வேலைத் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விழிப்புணர்வு நேற்றைய தினம் தந்தை செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், கிராமிய வறுமையை ஒழிக்காமல் நாட்டின் வறுமையை […]
அமெரிக்க விமானம் ஈராக்கில் வீழ்ந்தது

மேற்கு ஈராக்கில் ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில் எரிபொருள் மீள்நிரப்பு விமானமொன்று வியாழக்கிழமை(12) வீழ்ந்துள்ளது. இன்னொரு விமானமும் சம்பந்தப்பட்ட இச்சம்பவமானது தாக்குதலால் இடம்பெறவில்லை என ஐ. அமெரிக்க மத்திய கட்டளை மய்யம் தெரிவித்துள்ளது. இரண்டாவது விமானமானது பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளது. வீழ்ந்த விமானத்தில் ஆறு படையினர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விமானம் வீழ்ந்ததுக்கு ஈராக்கிலுள்ள ஈரானிய ஆதரவு ஆயுதக் குழுக்களின் கூட்டணி உரிமை கோரியுள்ளது.
ஈரான் புராதன இடங்கள் சேதம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28ம் தேதி போர் தொடுத்தன. இதில் இராணுவ தளங்கள், ஆயுத கிடங்குகள் பாதிக்கப்பட்டதோடு, ஈரான் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் புராதன இடங்களும் சேதம் அடைந்துள்ளன. ஐநாவின் விதிகளை மீறி டெஹ்ரானில் உள்ள கோலெஸ்தான் அரண்மனை, இஸ்பஹான் நகரில் உள்ள 17-ம் நூற்றாண்டு செகல் சோடோன் அரண்மனை, ஈரானின் மிக பழமையான இ-ஜமே மசூதி ஆகியவையும் சேதம் அடைந்துள்ளன. கொரம்மாபத் பள்ளத்தாக்கு பகுதியில் கட்டடங்கள் குகைகள் ஆகியவை பலத்த சேதம் […]