ஹோர்மூஸ் நீரிணை அருகே 6 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

மேற்காசியாவில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் நாட்டின் பல பகுதிகளை வான்வழி தாக்குதல்களால் குறிவைத்தன. இந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக ஈரானும் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், முழு மேற்காசியா பகுதியிலும் கடும் […]
உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை இன்று ஈரானுக்கு அனுப்ப நடவடிக்கை

இலங்கைக்குத் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு இலக்காகி மூழ்கடிக்கப்பட்ட’IRIS DENA’ கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் இன்று வெள்ளிக்கிழமை (13) ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை ஏற்றிய விசேட விமானம் ஒன்று இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஈரான் நோக்கிப் புறப்படத் தயாராக உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஈரான் தூதரகத்தின் நேரடி ஒருங்கிணைப்பின் கீழ் இந்தச் சடலங்களை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. […]
பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மிரிஹான, மஹரகம, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில், வீட்டு வேலைக்காக அமர்த்தப்படும் நபர்களால் தங்கம் மற்றும் பணம் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி, சில நபர்கள் திட்டமிட்ட முறையில் வசதி படைத்த வீடுகளை இலக்கு வைத்து, தமது குடும்ப உறுப்பினர்களையும் சம்பந்தப்படுத்தி திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர். குறுகிய காலத்திலேயே […]
எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தவறு செய்யாத எவரும் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டமை அரசியல் வட்டாரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகளை குழப்ப நினைப்பவர்களுக்கு மத்தியில் அரசாங்கம் சட்டத்தை முறையாக அமுல்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 12ஆம் திகதி வியாழக்கிழமை மொனராகலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் […]
ஈழத்தமிழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை பெற விரும்பினால் அதனை வழங்குங்கள் – சுமந்திரன்

இந்தியாவிலேயே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து, அங்கேயே குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, மீண்டும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். இந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின்பேரில் கடந்த வார இறுதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் இந்தியா சென்ற குழுவில் அங்கம் […]
ஒன்டாரியோவில் பணியிடை நீக்கப்பட்ட மருத்துவர் மீது மேலும் 28 பாலியல் முறைகேடு குற்றங்கள்?

வடக்கு சஸ்காட்சுவானில் பொது சுகாதார சேவைகளை வழங்கியதுடன் ஒன்டாரியோவில் உளவியல் சிகிச்சை வழங்கியிருந்த பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு மருத்துவருக்கு எதிராக காவல்துறையினர் மேலும் 28 புதிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அவருக்கு எதிரான மொத்த குற்றச்சாட்டுகள் 71 ஆக உயர்ந்துள்ளன. இதில் அவர் அல்பெர்டாவில் மருத்துவ மாணவராக இருந்த காலத்தைச் சேர்ந்த குற்றச்சாட்டுகளும் அடங்குகின்றன. டொரோண்டோ காவல்துறையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் டேவிட் எட்வர்ட்-ஊய் பூன் (David Edward-Ooi Poon) என்பவர் 2009 ஆம் ஆண்டு […]
தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; இருவர் கைது!
மாத்தறை – திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் பலத்த காயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் பதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் திக்வெல்ல – ரத்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் […]
பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக சூழலை உருவாக்க வேண்டும் – பெண்கள் அமைப்புக்கள்

சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் சமூக மட்டத்தில் சேவைகளை வழங்கிவரும் அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகளை அழைத்து மகளீர் தின கலந்துரையாடல் ஒன்றினை வியாழக்கிழமை (12) ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள். உரிமைகள் – நீதி – செயல் என்ற கருப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலில் அங்கவீனமான பெண்கள் அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்,மற்றும் நில ஆக்கிரமிப்பினால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், நுண்நிதி கடனினால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அரசாங்கம் கொண்டுவரும் திட்டங்களால் […]
விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு: 586 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (12) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 586 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,726 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 295 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 176 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 266 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 59 பேரும் பொலிஸாரால் […]
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து இணையத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல விடுத்துள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் விசேட சலுகைகள் பணப்பரிசுகள் அல்லது விளம்பரச் சலுகைகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் […]