பல பகுதிகளில் திடீர் மின் தடை

மின்சார சபை ஊழியர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையினால் நாட்டின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (10) திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அநுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின் தடைகளால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையே இந்த நிலைமைக்கு காரணமாக […]
டொரோண்டோ அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு; கனடாவின் பாதுகாப்பு மதிப்பாய்வு செய்ய வேண்டும் – பிரதமர் மார்க் கார்னி

டொரோண்டோ நகர மையத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக கட்டிடத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற மேற்படி சம்பவத்தை டொரோண்டோ காவல்துறையினர் “தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்” என்று குறிப்பிட்டுள்ளதோடு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை தேடியும் வருகின்றனர் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் ரோயல் கனடியன் மவுண்டட் காவல்துறை(RCMP) மற்றும் டொரோண்டோ காவல்துறை அதிகாரிகள், Queen Street West மற்றும் University Avenue அருகில் உள்ள தூதரகக் கட்டிடத்தில் […]
யாழ் மாவட்டம் நிதிமோசடியில் முன்னணி; சுமார் 225 முறைப்பாடுகள் பதிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும், யாழ்ப்பாணத்திலேயே மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ். ஜயமகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறுகையில், “யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் கடந்த வருடம் 225 மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக இடம்பெறும் மோசடிகள், இணையக் குற்றங்கள் ஊடாக இடம்பெறும் […]
எச்சரிக்கையாக இருங்கள் உமது அழிவு உம்மாலேயே ஏற்படக்கூடும்; ட்ரம்பிற்கு நேரடி எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் கொண்டு செல்வதற்கு ஈரான் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், அந்த நாட்டுக்கு எதிராக வொஷிங்டன் 20 மடங்கு கடுமையான தாக்குதலை நடத்தும் என ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர்மட்ட சபையின் செயலாளர் அலி லாரிஜானி கடும் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அலி லாரிஜானி தனது ‘X’ தளத்தில் , ஈரானிய மக்கள் உமது வெற்று மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். […]
பாரிஸில் அணுசக்தி உச்சிமாநாடு – 2026

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதாகவும் அது உலகத்திற்கு ஆபத்து என்று கூறியே அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக போரை ஆரம்பத்துள்ள நிலையில் இரண்டாவது அணுசக்தி உச்சிமாநாடு 2026 பாரிஸில் நேற்று (10.03.2026) ஆரம்பமானது. முதலாவது அணுசக்தி உச்சிமாநாடு 2024 மார்ச் 21 ஆம் திகதி பிரசல்ஸில் நடைபெற்றது. மாநாட்டில் சுத்தமான எரிசக்தி எதிர்காலத்தை நோக்கிய மாற்றத்திற்கு அணுசக்தி எவ்வாறு ஆதரவளிக்க முடியும். அதன் சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்காக அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள், நிதி நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப […]
ஆட்சியை மாற்றுவது ஈரானிய மக்களின் கைகளில்தான் உள்ளது

ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும் அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கி 10 நாள்கள் ஆகின்றன. தொடர்ந்து போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்தப் போர் தொடருமானால், அது சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்நிலையில், […]
புதிய அரச அதிபர் நியமனம்

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக, இலங்கை நிர்வாக சேவையின் அதிவிசேட தர அதிகாரியான அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார். மத்துகமவைப் பிறப்பிடமாகக் கொண்ட அனுபம மங்கள விக்ரமாராச்சி, மத்துகம சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். நிர்வாகத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், இதற்கு முன்னர் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் ஆணையாளராக செயலாற்றியுள்ளார்.
இலங்கை மின்சார சபை நெருக்கடிக்குத் தீர்வு?

இலங்கை மின்சார சபையுடன் தொடர்புடைய நான்கு பிரதான நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளை வழங்க பணிப்பாளர் சபைகள் இணக்கம் தெரிவித்துள்ளன. அந்த நான்கு நிறுவனங்களினதும் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, உடனடியாக பணிக்குத் திரும்புமாறு நான்கு நிறுவனத் தலைவர்களும் தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை […]
அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தடையின்றி எரிபொருள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தடையின்றி எரிபொருள் மற்றும் எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (10) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது: மத்திய கிழக்கு மோதல்களால் எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும், இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிசக்தி கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கின் தற்போதைய பதற்ற […]
மாணவர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முயற்சி; பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கம் போராட்டம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் மகா மாணவர் சங்கத்தினால் நேற்று இரவு கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் ஒரு ஒழுங்கையை பொலிஸார் மூடியதால் அவ்விடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. “தற்போதைய ஆட்சியாளர்கள் பல்கலைக்கழகங்களை ‘பாலர் பாடசாலைகளாக’ கருதி சட்டங்களை உருவாக்கி, சுற்று […]