பதற்றம் உச்சம்; ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீது குண்டு வீச்சு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலக்காக வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய விமானப்படைகள் தாக்குதல்களைத் தொடங்கிஉள்ளன. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலையும் ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் 9 ஆவது எட்டியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற […]