மீனோடு இணைத்து ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் இன்று மாலை(8.3.2026) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 49 , 23 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து 40 மற்றும் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. கைதான இருவரும் மீன் […]
ஒஸ்லோ அமெரிக்கத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு?

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று 8, அதிகாலை 1 மணியளவில் பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், தூதரகக் கட்டிடத்திற்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் நோர்வே பொலிஸாார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. தூதரகத்தின் தூதரகப் பிரிவு (Consular section) நுழைவாயிலுக்கு அருகே ‘வெடிபொருள்’ அல்லது ‘தீமூட்டும் கருவி’ கொண்டு […]
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் பதற்றமடைய தேவையில்லை

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டு மக்கள் பதற்றமடையத் தேவையில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பும் நாட்டின் இறையாண்மையும் பாதுகாக்கப்படும் வகையில், மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அரசு இவ்வேளையில் தீர்மானங்களை எடுத்து வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் ஏற்பட்ட சூழ்நிலைகளை அரசு சரியான முறையில் கையாள முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதைய நிலைமையை முன்னிட்டு யாரும் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை என […]
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்களுக்காக செல்லத் தயாராக இருந்த சுமார் 3,000 இலங்கைர்கள் போர் நிலைமை காரணமாக செல்ல முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிது. போர் சூழல் தணிந்த பின் அவர்களை தொழில்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசா மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான தேவையான நடவடிக்கைகளை பணியகம் மேற்கொள்ளும் என்றும் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நிலைமை சீராகும் […]
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்; சுரேஷ் சாலே தொடார்பான பல மர்மங்கள் வெளிப்படுகின்றன?

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்ததன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுமார் ஒரு வருட காலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே சாலே கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விசாரணை நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமான முறையிலும் […]
தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர்கள்; அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சிதைகிறது – ரவிகரன்

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசாங்கத்தின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன என்று சுட்டிக்காட்டி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காணி அமைச்சருக்கும் குறித்த […]
234 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன – குவைத்

குவைத்தில் நேற்று இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து 234 ஏவுகணைகள் மற்றும் 422 ட்ரோன்களை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தத் தாக்குதல் நடவடிக்கையினால் பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் மத்தியில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் ஒரு சிறுமி, குவைத் ஆயுதப்படையைச் சேர்ந்த இருவர் மற்றும் இரண்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் உள்ளடங்குகின்றனர். மேலும், கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத்தில் […]
அக்குரணையில் தீ

கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குரணை, 7ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள மரத்தளபாடக் காட்சி அறை ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(08) ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் அந்த நிலையத்திற்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இடத்தில் தளபாடக் காட்சி அறையுடன் சேர்த்து, தளபாட உற்பத்தி நிலையமும் மரக் களஞ்சியசாலையும் இயங்கி வந்துள்ளன. தீ விபத்தின் காரணமாக இந்த மூன்று பிரிவுகளுமே சேதமடைந்துள்ளதுடன், தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அலவத்துகொடை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக […]
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தொடர்பான அறிவிப்பு

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் போது கடந்த 28 ஆம் திகதி ஈரானிய அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்நிலையில் அங்கு இடைக்கால பொறுப்பை நிபுணர்கள் சபை ஏற்றது. பின்னர் 80 பேர் கொண்ட நிபுணர்கள் சபை புதிய அதி […]
யாழில் லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாவுக்கு ஏப்ரலில் கட்டளை

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் சாட்சியத்தை எவ்விதம் பதிவு செய்வது என்பது குறித்த நீதிமன்றக் கட்டளை எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினப் போராட்டத்தை ஒருங்கிணைக்க முயன்றபோது லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர். இது […]