உலகப் போர் நெருப்பு இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு ஈடுகட்ட முடியாத பேரழிவை ஏற்படுத்தும்

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் இலங்கைக் கடற்பரப்பு வரை வியாபித்துள்ள நிலையில், இது இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு ஈடுகட்ட முடியாத பேரழிவை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த அபாய அறிவிப்பை விடுத்துள்ளார். அவரது உரையின் முக்கிய சாராம்சம் வருமாறு, சர்வதேச கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை மற்றும் மற்றொரு கப்பல் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளமை […]

இராணுவத்திடம் கையளித்த உறவுகள் எங்கே? முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக காணப்படும் வட்டுவாகல் பாலத்தில் நேற்று (08) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது நேற்றுடன் ஒன்பது ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சர்வதேச மகளிர் தினமான […]

உற்பத்தியை குறைந்ததால் மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு

மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. இந்நிலையில் அதற்குப் பதிலடியாக இந்த உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 18% உயர்ந்து பீப்பாய் ஒன்றின் […]

பஹ்ரைனில் ஈரான் நடத்திய தாக்குதலில் 32 பேர் காயம்

பஹ்ரைன் தலைநகருக்கு அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சுமார் 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பஹ்ரைன் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி இந்த தகவல் வௌியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் பஹ்ரைன் பிரஜைகள் என தெரிவிக்கப்படுகின்றது. இதில் 17 வயது சிறுமி ஒருவரின் தலை மற்றும் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காயமடைந்தவர்களில் இரண்டு மாதக் குழந்தை ஒன்றும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 4 பேரின் […]

வௌிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கடுவலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ​ேகைது செய்யப்பட்டவர் கடுவலை, வெலிவிட்ட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கடுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி?

நாட்டில் கடந்த வாரத்தின் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (9) தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 377,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அமெரிக்க – இஸ்ரேல், ஈரான் மீது மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதி உச்சத்தை எட்டியிருந்தது. கடந்த வார ஆரம்பித்தில் 22 கரட் ஒரு […]

இன்று முதல் புதிதாக நிறுவப்பட்ட 6 நிறுவனங்கள் நடைமுறைக்கு வருகின்றன!

இலங்கை மின்சார சபையை கலைத்துவிட்டு, புதிதாக நிறுவப்பட்ட 6 நிறுவனங்கள் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருகின்றன. மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், நேற்று (08) நள்ளிரவுடன் இலங்கை மின்சார சபை எனும் கட்டமைப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 1969-ஆம் ஆண்டின் 17-ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு நிறுவன அலகாக இலங்கை மின்சார சபை சட்டப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி, மின் […]

திரு. கந்தன் சிவகுரு

யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் சுன்னாகம், கனடா – Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தன் சிவகுரு அவர்கள் 06.03.2026 வெள்ளிக்கிழமையன்று கனடா – Scarborough இல் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தன் லட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் காலஞ்சென்றவர்களான சபாநாயகம் இராஜேஷ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும் சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும் சசிகுமார், ஸயமினி, சிவரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் கதிரவேலு, கிருஷ்ணா ஆகியோரின் அன்புச் சகோதரனும் அஞ்சனா, குலநாயகம், கோபிகா ஆகியோரின் […]

இந்த ஆண்டின் இரண்டு மாத காலப்பகுதியில் 3600 வீதி விபத்துக்கள்!

இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் 3,600-க்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 3,642 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. 405 உயிரிழப்பு நேரிட்ட விபத்துக்கள் பதிவான நிலையில் அவற்றில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 866 பாரதூரமான விபத்துக்கள் பதிவான நிலையில் அவற்றில் 1,730 பேர் காயமடைந்துள்ளனர். இது தவிர 641 […]

போர்ப் பதற்​றம்; 52,360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

போர்ப் பதற்​றம் நில​வும் வளை​குடா நாடு​களில் இருந்து கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு வரை 280 விமானங்​களில், 52,360 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பி​யுள்​ளனர் என டி.ஜி.சி.ஏ. கூறியுள்ளது. ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதல் நேற்று 8-வது நாளை எட்டியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்ப​தால் வளை​கு​டா​வில் போர்ப் பதற்றம் அதி​கரித்​துள்​ளது. இதனால் வளை​குடா நாடுகளில் இருந்து இந்​தி​யர்​களை மீட்க மத்​திய அரசு நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில், மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் (டி.ஜி.சி.ஏ) நேற்று வெளி​யிட்ட […]