போதுமான காரணமின்றி என்னைக் கைது செய்து தடுத்து வைத்திருக்கிறார்கள் – பிள்ளையான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல் செய்த அடிப்படை உரிமை (FR) மனுவை மார்ச் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் போதுமான காரணமின்றி கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகக் கூறி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று திங்கட்கிழமை (09) விசாரணைக்கு உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த […]
போர்க்கப்பல் தொடர்பான ஈரான் இராணுவத்தின் அறிவிப்பு

ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக, இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் இந்த கப்பல் விபத்துக்குள்ளானது. கடந்த மார்ச் 4-ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் மீது தாக்குதலுக்குள்ளானது. கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். […]
வீதியில் மோட்டார் சைக்கிளை ஆபத்தாக செலுத்தியவர் கைது

வீதியில் மோட்டார் சைக்கிளை கவனக்குறைவாக செலுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அதனை செலுத்திய நபர் இவ்வாறு கைதாகியுள்ளார். இரு இளைஞர்கள் வீதியில் பயணிப்பவர்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையிலும், விபத்து ஏற்படும் வகையிலும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய சம்பவம் தொடர்பான காணொளியின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். குறித்த மோட்டார் சைக்கிள் ஆனமடுவ பகுதியை நோக்கிச் செலுத்தப்பட்டமை இதன்போது கண்டறியப்பட்டது. […]
ஈரான் உடனான போரை நிறுத்துவது குறித்து கூட்டாகவே தீர்மானிப்போம் – டிரம்ப்

ஈரான் உடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் டிரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாங்கள் இருவரும் இது குறித்துப் கலந்துரையாடி வருகின்றோம். சரியான நேரத்தில் நான் ஒரு முடிவை எடுப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா தமது […]
மணற்காட்டில் கத்தி முனையில் நகை கொள்ளை

யாழ்ப்பாணத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீடொன்றினுள் புகுந்து ஒரு தொகை நகைகளைக் கொள்ளையடித்ததுடன், வீட்டின் உரிமையாளர் மீதும் மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் உள்ள வீடொன்றினுள் (ஞாயிற்றுக்கிழமை(08) மூன்று முகமூடிக் கொள்ளையர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதன்போது, வீட்டின் உரிமையாளர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள், அவரைக் கடும் காயங்களுக்கு உள்ளாக்கினர். பின்னர், அவரது மனைவியைக் கத்தி முனையில் அச்சுறுத்தி, அவரிடமிருந்த சுமார் 5 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் […]
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து தமிழ்நாடு த.வெ.க போராட்டம்!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மார்ச் 12 ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு […]
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.33 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் உலக நாடுகளும் கலக்கத்தில் உள்ளன. ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப்படைகள் தீவிரப்படுத்தியுள்ளதையடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய கடல் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனால் உலக […]
விஜய்யின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் புதிய மனு

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், விஜய் மீது அதிரடியான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தற்போது தமிழக அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட விஜய் – சங்கீதா தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்வுகளில் சங்கீதா பங்கேற்காமல் இருந்து […]
டொரோண்டோவைத் தலைமையிடமாகக் கொண்ட மருந்து நிறுவனத்தின் புது முயற்சி!

புதியதாக உருவாக்கப்பட்ட ஒரு கனேடிய மருந்து நிறுவனம், உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட மருந்துகளில் ஒன்றான ஓசெம்பிக்(Ozempic)இற்கு ஜெனெரிக் (generic) தயாரிப்பைக் கொண்டு வந்து சந்தையில் இடம்பிடிக்க முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. “இந்த ஒரே மருந்தில் நாங்கள் எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம் என்று சொல்லலாம்” என்று டொரோண்டோவைத் தலைமையிடமாகக் கொண்ட Vimy Pharma நிறுவனத்தின் இணை நிறுவனர் David Suchon கூறியுள்ளார். உடல் எடை குறைக்கும் மருந்துகளான Ozempic மற்றும் Wegovy ஆகியவற்றின் செயலில் உள்ள மூலப்பொருளான […]
வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது!
வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று(8.3.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று காலை விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்போது 4 இளைஞர்களிடமிருந்து 500போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.