பொதுமக்கள் மற்றும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உதவ நிபுணர் குழுக்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உதவி வழங்குவதற்காக உக்ரைன் தனது நிபுணர்களின் குழுக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகிறார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ளும் போது பொதுமக்களுக்கும் அமெரிக்க துருப்புக்களுக்கும் உதவுவது குறித்து பல செய்திகள் தனக்கு வந்ததாக ஜனாதிபதி தனது ‘X’ கணக்கில் எழுதினார். “அவர்களைப் பாதுகாக்கவும், எங்கள் நிபுணர்களை அனுப்பவும் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என்று அவர் மேலும் […]
பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 47 பேருக்கு 10 ஆண்டுகால சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டம் நடத்திய அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், இம்ரான்கான் கட்சியை சேர்ந்த 47 பேருக்கு தலா 10 ஆண்டுகால சிறைத் தண்டனையும் தலா 5 இலட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023இல் இம்ரான் கான் கைது […]
உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: சர்வதேச நாணய நிதியம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் உலகளாவிய பணவீக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு, எரிசக்தி பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. ஜப்பானிய நிதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கச்சா எண்ணெய் விலையில் 10 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டு, அது இந்த ஆண்டின் பெரும்பகுதி வரை நீடிக்குமானால், உலகளாவிய பணவீக்கம் 40 […]
ஈரானில் நடத்தப்படும் மிலேச்சத்தனமான அனைத்து தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் – காதர் மஸ்தான்

அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப்படையினரால் ஈரானில் நடத்தப்படும் அனைத்து மிலேச்சத்தனமான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது நடைபெற்று வருகின்ற இந்த யுத்தம் காரணமாக உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறுபட்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இதனால் பல்வேறு அப்பாவி மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. அதேநேரம் சவூதி அரேபியா, கட்டார், உள்ளிட்ட ஏனைய அரபு நாடுகள் மீது ஈரான் […]
3,700 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

உள்நாட்டு சந்தைக்கு திங்கட்கிழமை (09) 3,700 மெட்ரிக் தொன் எல்பி (LP) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா (Litro Gas Lanka) நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மைக் காலங்களில் மொத்தம் 7,900 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மார்ச் மாதத்திற்காக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் கோரப்பட்டுள்ளது. கூடுதலாக 30,000 மெட்ரிக் தொன் எரிவாயு […]
வெதுப்பக வியாபாரத்தின் போது வெற்றிலை மென்றவர் மீது நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு வெற்றிலை மென்று கொண்டு வெதுப்பக வண்டியில் வெதுப்பக உணவுப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் குறித்த வண்டியின் சாரதி மருத்துவ சான்றிதழையும் பெற்றிருக்கவில்லை எனவும் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிக்கின்றார். இந்நிலையில் வெதுப்பக வண்டிகளில் சினிமா பாடல்களை பெரும் சத்தமாக ஒலி எழுப்பிச் செல்வதனால் […]
எண்ணெய் விலை அதிர்வுகளை சமாளிக்க இலங்கை தயாராக உள்ளது

உலக சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலை மாற்றங்களை எதிர்கொள்ளும் பலமான நிலையில் இலங்கை தற்போது உள்ளதாகவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடுகையில், இலங்கை தற்போது மிகச் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, அக்காலத்தில் 70 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் […]
ஜோர்ஜியன் வளைகுடாவிலிருந்து பிரிந்த பனித்தட்டில் சிக்கியவர்களைக் காப்பாற்றிய ஒன்டாரியோ காவல்துறை

ஒன்டாரியோ மாகாண காவல்துறை அதிகாரிகள் ஒன்டாரியோ மாநிலத்தின் ஓவென் சவுண்டிற்கு வடக்கில் உள்ள பல்மி பீச் அருகே பனியின் மீது பலர் சிக்கியிருப்பதாக அறிந்த தகவலையடுத்து அவர்களை மீட்டதாக தெரிவித்துள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜோர்ஜியன் வளைகுடாவில் கரையிலிருந்து பிரிந்த பனித்தட்டில் நின்றிருந்த 23 பேரை மீட்டதாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையால் பின்னர் வெளியிடப்பட்ட செய்தியில் பலத்த காற்றும் நீரோட்டமும் காரணமாக அந்த பனித்தட்டு கரையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நகர்த்தப்பட்டதாக OPP கூறியது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் […]
மனிதக் கடத்தல் தடுப்பு விசேட பயிற்சிப் பட்டறை ஆரம்பம்!

அவுஸ்திரேலிய ஃபெடரல் பொலிஸாரினால் (AFP) ஏற்பாடு செய்யப்பட்ட “மனிதக் கடத்தல் மற்றும் ஆள் கடத்தல் புலனாய்வு” (People Smuggling and Human Trafficking Investigations) தொடர்பான சிறப்பு பயிற்சிப் பட்டறை இன்று (09) காலை 9.00 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பமானது. இதன் ஆரம்ப நிகழ்வு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றது. குறித்த பயிற்சி பட்டறையானது இன்று (09) முதல் எதிர்வரும் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் […]
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவரிடம் திருட்டு தங்க நகைகள்; இளவாலையில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருட்டு நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) இளைஞன் ஒருவர் 4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கடந்த பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி வீடொன்றில் ஒன்பதரை பவுண் தங்க நகைகள் மற்றும் 80 ஆயிரம் […]