ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பாரிய மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; இந்த ஆண்டில் மின்சார உற்பத்திக்காக 25 நிலக்கரி கப்பல்களை விநியோகிக்கும் […]

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (09) நடைபெற்றது. குறித்த அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான சட்டத்தரணி றியாஸ் ஆதம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் மூன்று உள்நாட்டு நபர்களும் விபத்துக்குள்ளானதில், ஒரு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி உயிரிழந்தார். உயிரிழந்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சுமார் 70 வயதுடைய ஒருவர் என பின்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டு உள்ளூர் நபர்களும் ஒரு சிறுவனும் அந்தப் பகுதிக்கு அருகிலுள்ள கடற்கரைக்குச் சென்றுவிட்டு, குறித்த பாலத்தின் மீது […]

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று (08) இரவு பாரிய தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அளுத்கம பகுதியிலுள்ள வனப்பகுதியில் ஆரம்பித்த இந்தத் தீ, தற்போது ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதி வரை பரவியுள்ளது. இதனால் அப்பகுதியெங்கும் கடும் புகைமூட்டம் காணப்படுவதுடன், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அளுத்கம பகுதி மக்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தீ விபத்துக்கான அதிகாரப்பூர்வ […]

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில் அனுபவிக்கக்கூடிய யதார்த்தமாக மாற்றப்பட வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். “வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” எனும் தொனிப்பொருளில் மாத்தறை, ருஹுணு பல்கலைக்கழகத்தில் நேற்று (08.03.2026) நடைபெற்ற சர்வதேச மகளிர் தினத் தேசிய விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு பிரதமர் மேலும் […]

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இன்று (09) மீண்டும் ஹட்டன் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர் கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நான்கு […]

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம திங்கட்கிழமை(09) அன்று உத்தரவிட்டார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட அந்தப் கட்சியின் ஆறு உறுப்பினர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சாட்சியாளர்களின் […]

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடிப்பார். கேரி கிர்ஸ்டன் இதற்கு முன்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக (2008-2011) பணியாற்றி, […]

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில் இருந்து குறித்த லொறியை பின்தொடர்ந்து சென்று மீசாலை பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் மரக்குற்றிகளை இறக்க தயாரான போது, அதன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர் இதன்போது 20 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான 52 தேக்குமரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த லொறி இந்தக் குற்றத்திற்காக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சாவகச்சேரி பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் எதிர்கொண்டுள்ள ஆயுத மோதல்களுக்கு மத்தியில், ரஷ்யா எப்போதும் ஈரானின் நம்பகமான பங்காளியாக இருக்கும் என்பதை புடின் அதில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, தனது தந்தை ஆரம்பித்த பணிகளை அவர் கௌரவமான முறையில் முன்னெடுத்துச் செல்வார் என தாம் நம்புவதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.