IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு குணமடைந்த 22 மாலுமிகள் விமானப்படை முகாமிற்கு மாற்றம்!

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரான் கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலும் […]
மன்னாரில் பெண்களுக்கு இடையூறு விளைவித்த இ.போ.ச. காப்பாளருக்கு தண்டனை

மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) காப்பாளருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ். விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பில் அதிகார சபையின் தலையீட்டுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் […]
செங்கலடி பிரதான வீதி வர்த்தக நிலைய திருட்டு; ஒருவர் கைது
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி – பதுளை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் இடம்பெற்ற பாரிய திருட்டுச் சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர் ஒருவர் சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தக நிலையத்தில் சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் களவாடப்பட்டிருந்தன. இது குறித்து ஏறாவூர் பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சம்பவ இடத்திலிருந்து பொலிஸாரால் பெறப்பட்ட கைவிரல் […]
நொச்சிமுனையில் முகத்தில் யானை மிதித்ததில் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த 59 வயதுடைய சோமசுந்தரம் அரிச்சந்திரன் என்பவர், சின்னப்புல்லுமலை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தோட்டத்தில் உள்ள வாடியில் உறங்கிக்கொண்டிருந்தபோது வந்த யானை, வாடியை உடைத்துள்ளது. அங்கிருந்து தப்பியோட முயன்ற அரிச்சந்திரனை துரத்திச் சென்று தாக்கிய யானை, அவரது முகத்தில் மிதித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார். அவரது சகோதரி சடலத்தை […]
தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தற்காலிக நிவாரணமே

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு என்பது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே எனவும், அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாகும் எனவும் முன்னாள் அமைச்சரும், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் கொட்டகலையில் அண்மையில் இடம்பெற்ற ‘மலையக வாழ்வுரிமை மாநாட்டில்’ கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்: “மலையக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, […]
நியூகாசிலை வீழ்த்தி காலிறுதியில் சிற்றி

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது. விலகல் முறையிலான இத்தொடரில், நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற அவ்வணியுடனான ஐந்தாவது சுற்றுப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு சிற்றி தகுதி பெற்றுள்ளது. சிற்றி சார்பாக ஓமர் மர்மெளஷ் இரண்டு கோல்களையும் சவின்ஹோ ஒரு கோலையும் பெற்றனர். நியூகாசில் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹாவி பார்ன்ஸ் பெற்றிருந்தார்.
செங்கலடியில் வண்டுகளுடன் உணவு: உணவகத்திற்கு சீல்

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத மற்றும் வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட உணவகம் ஒன்றுக்கு எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த உணவகத்திற்கு 70,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதனைத் தற்காலிகமாக மூடவும் (சீல் வைக்கவும்) நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். முரளீஸ்வரனின் வழிகாட்டலில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான தவேந்திரராஜா, […]
வளைகுடா எடுத்துள்ள அதிரடி திட்டம்

மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி உட்கட்டமைப்பு, சுற்றுலாத் துறை மற்றும் பாதுகாப்பு வரவு – செலவுத் திட்டங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபரிசீலனை இதையடுத்து, பிரிட்டனில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா உடனான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளன. இது குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்த நான்கு நாடுகளும் அமெரிக்கா […]
தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன் முறையாக தேர்தல் களத்தை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கொள்ள உள்ளது.வீட்டில் இருந்து அரசியல் செய்கிறார், அறிக்கை அரசியல் என […]
உலகில் அதிக ஒல்லியான மக்கள் வாழும் நாடுகள்..

உலகில் உள்ள நாடுகள் மத்தியில் உணவு பழக்கம் , கால நிலை போன்றவை வேறுப்படும். இதனால், மனிதர்களின் அன்றாட வேலை மற்றும் பழக்க வழக்கம் மாறுப்படும். இதனால், மனிதர்கள் உடலில் மாற்றம் ஏற்படும். இதில் சிலர் உடல் பருமனாகவும் , சிலர் ஒல்லியாகவும் காணப்படுவர். ஆனால், ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும் குறைந்த அளவில் உடல் பருமன் கொண்ட மக்கள் தொகை நாடு உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இது குறித்து விரிவாக பார்க்கலாம். […]