பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி கட்டார், லெபனான், ஜோர்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, அப்பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் அந்தந்த நாடுகள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அதற்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். மேலும், அந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார். […]
இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடல் எல்லைக்குள் விட்டுச் சென்ற காணொளி வெளியாகியுள்ள போதிலும், இலங்கை கடற்படையினரால் அவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஊரணிப் பகுதியிலிருந்து சிறிய படகில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள், இயந்திரக் கோளாறு அல்லது சீரற்ற காலநிலை காரணமாக திசைமாறி நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். பல நாட்களாக நடுக்கடலில் தவித்த […]
வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், குறித்த வீட்டுக்கு மாத்திரம் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வேங் யீ Wang Yi, பிராந்தியத்தில் சமரச பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க சிறப்பு தூதுவரை அனுப்புவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர்களுடன் நடைபெற்ற தனித்தனி தொலைபேசி உரையாடல்களுக்கு பின்னர் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபிய […]
அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசு தூதரகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு தனது செய்தியைப் பதிவு செய்தார். அமைச்சர் விஜித ஹேரத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவர்களின் மறைவு குறித்து ஈரான் இஸ்லாமிய […]
புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில் மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 2026.03.09ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம் கடிதத்தில் […]
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று புதன்கிழமை (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. தற்போதைய நெருக்கடி நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் […]
உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) குவைத்தின் ‘போர்ட் ஷுஐபா’ பகுதியில் அமைந்துள்ள கட்டளை மையத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஆறு படையினர் உயிரிழந்துள்ளனர். விமானப் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக மூவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட போதிலும், காயமடைந்த ஒருவர் உயிரிழந்ததாலும், இடிபாடுகளுக்கு இடையே மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டதாலும் […]
2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்து சற்றுத் தடுமாறியது. எனினும், அதிரடியாகத் […]
அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இலக்கம் 35 ஆக இயற்றப்பட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானி சட்டத்தை (Chief of Defence Staff Act) ரத்து செய்வதற்கான அரசின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்ய தேவையான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு 2025 பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை […]