ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இஸ்லாமியக் குடியரசின் தேசியக் கொடியால் மூடப்பட்ட சவப்பெட்டிகள் பெரும் மக்கள் திரளான மக்களின் நடுவே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஒளிபரப்பின் போது, தங்களின் மகள்களை இழந்த தாய்மார்களும் தந்தையர்களும் அனுபவிக்கும் துயரத்தை விவரிக்கும் குரல்விளக்கம் ஒலிபரப்பப்பட்டது. மேலும், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 160-க்கும் மேற்பட்ட கல்லறைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த பெண்கள் பள்ளி, […]
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின் நீதி அமைச்சராக கடமை ஆற்றி வருகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்போது நீதி அமைச்சராக பதவி வகிக்கும் ஹர்ஷண நாணயக்கார அன்று மட்டக்களப்பு சென்று சஹ்ரான் வழக்கில் முன்னிலையானதாக […]
கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற செவிலிய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு பிள்ளையின் தாயான இவர், தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், தற்காலிகமாக வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட செவிலியருக்கும், வீதி […]
மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோரைக் ஒன்றிணைத்து மேற்படிக் கருத்தரங்கு நடைபெற்றதாக பீல் பிராந்திய காவல்துறையின் சமூகவலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வில் ஏற்புரையாற்றிய பீல் பிராந்திய காவல்துறை துணைத் தலைவர் நிக் மிலினோவிச், எங்களின் தொடர்ச்சியான மனிதக் கடத்தல் விசாரணைகள், உயிர் தப்பியவர்களை பாதுகாக்கவும், அவர்கள் தங்கள் […]
மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு விசாரணை நடைபெற்று வரும் இந்தவேளையில் பொதுமக்களின் உதவியை காவல் துறையினர் கோருகின்றனர். 38 வயதுடைய மெஸ்கான் ஐனி (Mezhgan Aini) அல்லது “சாரா” (Sarah) என்ற பெயர்களாலும் அறியப்பட்டவர், மிசிசாகாவில் உள்ள குயின் ஃப்ரெடெரிகா டிரைவ் (Queen Frederica Drive) மற்றும் டண்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Dundas Street East) பகுதிகளில் வசித்து வந்தார். அவர் […]
வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது. லெபனான் அரசாங்கத்தின் அனர்த்த மேலாண்மைப் பிரிவின் தகவல்படி, இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை நேற்று இருமடங்காக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு, கடந்த 48 மணிநேரத்திற்குள் 58,000 ற்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடித் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 50 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் […]
அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரியாத்தில் உள்ள தூதரக வளாகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதை அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இத்தாக்குதலின் இலக்கு CIA மையமா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலினால் தூதரகத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதோடு, உட்பகுதி புகையினால் சூழப்பட்டுள்ளதாக அந்த […]
நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி முதலாவது விமானம் புறப்பட்டுச் சென்றது. ஃபிட்ஸ் எயார் (Fits Air) விமான சேவைக்குச் சொந்தமான 8D 821 என்ற விமானம் இன்று பிற்பகல் 01.20 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து துபாய் நோக்கிப் புறப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்த விமானத்தில் 47 பயணிகளும் 10 விமானப் […]
ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய அட்வகேட் கமிஷனர் ஒருவரை நீதிமன்றம் நியமித்தது. ஆனால் அட்வகேட் கமிஷனர் கொடுத்த அறிக்கையில் தவறு இருப்பதாக மனுதாரர்களில் ஒரு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரை நிராகரிக்க விசாரணை நீதிமன்ற நீதிபதி, இதேபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கியதாக, நான்கு தீர்ப்புகளை மேற்கோள் காட்டியிருந்தார். ஆனால், அந்தத் தீர்ப்புகள் உண்மையில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டவை அல்ல என்றும் […]
மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட குருணாகலை, மஹவ பிரதேசத்தில் உள்ள மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதற்காக இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து ரூ. 750,000 பணத்தைப் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்தபடி வேலை பெற்றுக்கொடுக்கவில்லை என பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு […]