ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!
800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த இருவரும் அதிகளவான டீசலை அதிக விலையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்களிடமிருந்து 800 லிட்டர் டீசல், டீசலை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட கொள்கலன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் […]
களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன், இதனால் மின்மாற்றியின் ஒரு பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் லெகோ (LECO) ஊழியர்களும் வருகை தந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) கையளித்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பான பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கை, குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் விடுத்த பணிப்புரைக்கு அமைவாக, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தலைமையிலான உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான […]
தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, இன்று (04) காலை கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை 376,500 ரூபா வரை குறைந்துள்ளது. நேற்று (03) இதன் விலை 388,500 ரூபாவாகக் காணப்பட்டது. இதேவேளை, நேற்று 420,000 ரூபாவாகக் காணப்பட்ட “24 கரட்” தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 407,000 ரூபா […]
காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி கடற்பரப்பிலிருந்து 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் 180 பேர் இருந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அமைச்சர், அவர்களில் 30 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டு, தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் ஆராயப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு, 10 இலட்சம் தொழிலாளர்களின் பாதுகாப்பு மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பணிபுரிந்து வரும் சுமார் பத்து […]
வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனுமதி பத்திரமன்றி இறைச்சிக்காக சட்டவிரோதமாக மாட்டை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற இருவரை வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர். மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவே இவ்வாறு கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர், பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் செல்லும் கடல் பாதை வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. இது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான உலகின் மிக முக்கியமான பாதைகளில் ஒன்றாகும், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் கடந்து செல்கிறது. வளைகுடா வழியாக “அரசியல் […]
காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும் பிரதான நீர்த்தேக்கங்களில் ஒன்றான காசல்ரி நீர்த்தேக்க வன பாதுகாப்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் 02ஆம் திகதி மாலை ஏற்பட்ட தீயினால் பல ஏக்கர் வன பிரதேசம் அழிவடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன. இதனால், நீரூற்றுக்கள் அற்றுப்போய் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் குறைவடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளது. அத்தோடு எமது நாட்டுக்கு உரிதான அறிய வகை தாவரங்கள் மூலிகை செடிகள், […]
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இரண்டு அணிகளும் குழுநிலைப் போட்டியில் சந்தித்தபோது தென்னாபிரிக்கா வென்ற நிலையில் அப்போட்டியிலிருந்து நியூசிலாந்து முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக தென்னாபிரிக்க அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரமை நியூசிலாந்து அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர், கோல் மக்கொஞ்சி ஆகியோர் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தவிர டேவிட் மில்லர், டெவால்ட் பிறெவிஸ், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை உள்ளடக்கிய மத்திய […]