டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் வசிக்கிறார்கள்

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் வசிக்கும் 25 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வருகின்றனர். மோசமான காலநிலை நிலவி மூன்று மாதங்கள் கடந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தங்களுடைய சொந்த வீடுகளை விட்டு வெளியேறி இரண்டு மாதங்களாக அதே தோட்டத்தில் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், டிட்வா புயல் தாக்கி எங்கள் தோட்டத்தின் ஒரு பகுதி வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பிறகு, சுமார் ஒரு […]

அச்சுவேலியில் காலாவதியான பிஸ்கெட்டை விற்பனை செய்ய முயன்றவருக்கு அபராதம்!

யாழ்ப்பாணம்- அச்சுவேலி பகுதியில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்போது பல்பொருள் அங்காடி ஒன்றில் காலாவதியான பிஸ்கட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது வர்த்தக நிலைய […]

இரத்தோட்டையில் கால்வாயில் விழுந்து வயோதிபப் பெண் பலி!

மாத்தளை – இரத்தோட்டை பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் தனது வீட்டுக்கு அருகிலுள்ள கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இரத்தோட்டை, கைகாவல பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெளிநாட்டு பயணிகளுக்கு இலவச விசா நீட்டிப்பு

ஈரான் போர் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேற முடியாத வெளிநாட்டுப் பிரஜைகளின் வீசா காலத்தை இலவசமாக நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து வெளியேற முடியாத பயணிகள் விசா காலாவதி சிக்கல்களை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக குடிவரவு மற்றும் குடியேற்ற துறை தெரிவித்துள்ளது. 2026 பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு நோக்கி செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, குடிவரவு மற்றும் குடியேற்ற திணைக்களம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக சிறப்பு நடவடிக்கையாக […]

பிரதான வீதியில் உழவு இயந்திரத்தின் மீதேறிய டிப்பர்!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்துக்குள்ளானது. நேற்று (1) இடம்பெற்ற இந்தவிபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான டிப்பர் வாகனம் ஒன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் பழுதான நிலையில் இருந்துள்ளது. அந்த வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் […]

இன்று சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும். காற்றின் […]

மன்னாரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் அடம்பன் பகுதியில் பொதுமக்கள் சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளைத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார். இதன் போது பொது மக்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலில் தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இக் கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சி செயல்பாடுகள் மற்றும் எதிர்கால […]

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் தாக்குதல்: இலங்கையர் உட்பட 58 பேர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தொடர்ச்சியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் என ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், இந்தத் தாக்குதல்களின் காரணமாக இலங்கை பிரஜை ஒருவர் உட்பட பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 58 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை பாதுகாப்பதற்காகவே புதிய சட்டம்

ஏற்கனவே உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை பாதுகாப்பதற்காக, அரசாங்கத்தை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசு கொண்டுவருவது போல் செயற்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாறி மாறி வந்த அரசுகள் எவையாக இருந்தாலும் அவர்களுடைய எண்ணங்களும் கொள்கைகளும் ஒன்று தான் என்பதை அநுர அரசும் […]

இஸ்ரேலின் ஜெருசலேம் அருகே ஈரான் பாரிய ஏவுகணைத் தாக்குதல்: 9 பேர் பலி

இஸ்ரேலின் ஜெருசலேமிற்கு மேற்கே அமைந்துள்ள பகுதியொன்றின் மீது ஈரான் பலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஜெருசலேமிற்கு மேற்கே உள்ள பெய்ற் ஷெமேஷ் நகர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 27 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் முன்னெடுத்த தாக்குதல்களில், இஸ்ரேலுக்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்திய மிகக் கடுமையான தாக்குதல் இதுவாகும் […]