தெற்கு ஈரானில் பெண்கள் பாடசாலை மீதான தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 165ஆக உயர்வு

தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் ஆரம்பப் பாடசாலையின் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாணவியரின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த தாக்குதலில் சிக்கி 96 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.ஆர்.என்.ஏ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (28) ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் அமைந்திருக்கும் இந்த பெண்கள் ஆரம்பப் பாடசாலையின் மீது சரமாரியாக வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையின்போது 85 மாணவிகள் […]

உடையார்கட்டு குளம் பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞர் கைது!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குளம் பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, உடையார்கட்டு குளம் அருகே விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 லீற்றர் (135 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை […]

தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு

அண்மைக்காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு–கிழக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சந்தித்த பின்னடைவை கருத்தில் கொண்டு, மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதை அவதானித்தும், தமிழ் மக்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட அரசியல் தீர்மானம் காலத்தின் அவசியமாகியுள்ளது என வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்தேசியத்தை பலவீனப்படுத்தக்கூடிய அக மற்றும் புறச் சூழல்கள் பலமடைவதையும், கடந்த காலங்களில் அரசியல் தீர்வு தொடர்பில் பொதுநிலைப்பாட்டை எடுப்பதில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் அதன் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான திகதி?

தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-திகதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, இந்த 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். […]

அரசாங்கம் உருவாக்கிய ‘Rebuilding Sri Lanka’ நிதியம் உண்மையில் இருக்கிறதா?

‘டித்வா’ சூறாவளிக்குப் பின்னர் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் உருவாக்கிய ரீபில்டிங் சிறிலங்கா ‘Rebuilding Sri Lanka’ நிதியம் உண்மையில் இருக்கிறதா? அல்லது அது வெறும் விளம்பர முயற்சியா? என பிபிசி வெப்தளம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மேற்கொண்ட தகவல் அறிதலில் ஜனாதிபதி அலுவலகமும் நிதி அமைச்சும் வழங்கிய பதில்கள் பல சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பிபிசியின் RTI வெளிப்படுத்திய நிதியின் உண்மை நிலையை காட்டும் 8 முக்கிய அம்சங்கள்: ஜனவரி 23ஆம் […]

இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு மாற்றுத் தீர்வு எட்டப்படும் வரும் வரைமாகாண சபை முறைமை நீக்கப்படாது : ரில்வின் சில்வா

இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு மாற்றுத் தீர்வைக் கண்டுபிடிக்கும் வரை மாகாண சபை முறைமை நீக்கப்படமாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், இனப்பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வை உருவாக்க வேண்டும் என்பதை எமது தேர்தல் அறிக்கையிலேயே நாம் உறுதியளித்திருந்தோம். மாகாண சபைகள் அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற உதவவில்லை என்பது எமது கருத்து. எவ்வாறாயினும், ஒரு சிறந்த மாற்றுத் தீர்வைத் தேடும் வரை மாகாண சபைகள் அவ்வாறே […]

7 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியுடைய போதை மாத்திரைகளைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரகஸ்மங்ஹந்திய, யுத்தபிட்டிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஊரகஸ்மங்ஹந்திய, கைலத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 1,340 போதை மாத்திரைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை ஊரகஸ்மங்ஹந்தியிலிருந்து கொஸ்கொட நோக்கி விற்பனைக்காக எடுத்துச் […]

இணையச் சேவை ஈரானில் முடங்கியது!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய நிலப்பரப்பின் மீது நடத்திய பாரிய தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஈரான் நடத்திய பதில் தாக்குதல்கள் இடம்பெற்றுச் சில மணிநேரங்களின் பின்னர், அந்நாட்டின் இணைய வசதிகள் கடுமையாகக் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகளாவிய இணையச் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ‘கென்டிக்’ நிறுவனத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர் ஈரானின் இணையத் தொடர்புகளில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானின் உலகளாவிய இணைய அணுகலில் சுமார் 99% தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கணித்துள்ளது. […]

யாழ்.பேருந்து நிலையத்தில் சிசுவின் கருச்சிதைவு மீட்பு!

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ் . நீதவான் லெனின்குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார். அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6- 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கருவினை கடதாசி பெட்டியால் […]

மத்திய கிழக்கு பதற்றம்: இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அறிவிப்பு

கிழக்கில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கே அரசாங்கம் மிக உயர்ந்த முன்னுரிமை அளிப்பதாக அமைச்சின் ஊடக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இலங்கை குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கையர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள் மத்திய கிழக்கில் […]