அடையாளம் காணப்படாத சடலம் மீட்பு!

நிட்டம்புவ – ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் காணப்படாத நபரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் சுமார் 60 முதல் 65 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், 5 அடி 3 அங்குல உயரமுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவர் வெள்ளை நிறக் கோடுகள் இடப்பட்ட சாரம் ஒன்றை அணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் முகம் முழுவதும் தாடி வளர்த்திருந்த நபர் எனவும் பொலிஸார் விபரித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலையின் […]

குவைத் வாழ் இலங்கையர்களுக்குத் தூதுவர் அறிவிப்பு!

வீண் அச்சம் வேண்டாம்: குவைத் வாழ் இலங்கையர்களுக்குத் தூதுவர் அறிவிப்பு! குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் லக்ஷித ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ள போதிலும், அந்தத் தாக்குதல்களினால் எந்தவொரு இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகக் குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார். அங்குள்ள […]

லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் – 31 பேர் பலி!

லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 149 பேர் படுகாயமடைந்துள்ளதாக லெபனான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் மேலும் தீவிரமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் பின்வருமாறு: ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் […]

QR முறையைப் பயன்படுத்த வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை – டி.ஜே. ராஜகருணா

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR முறையைப் பயன்படுத்த வேண்டிய எவ்வித அவசியமும் இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏதேனும் ஏற்பட்டால், அவ்வாறான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் QR முறையைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். […]

எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும் – எலான் மஸ்க்

”சீனா வேகமாக சூரிய சக்தி மற்றும் மின்சார ஆற்றலுக்கு மாறுகிறது. எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும்” என எலான் மஸ்க் தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் கூறுகையில், சூரிய ஒளியை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை நோக்கி சீனா வேகமாக நகர்கிறது மற்றும் மின்சாரம், இது புதைபடிவ எரிபொருட்களின் (எண்ணெய் மற்றும் எரிவாயு) தேவையை வெகுவாகக் குறைக்கும். அவர் தனது x கணக்கில் ஒரு […]

2027 முதல் 6ஆம் தர மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தம் – பிரதமர்

மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியைப் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ரமழான் நோன்பு நோற்கும் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்களுடன் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற சுமுகமான சந்திப்பின்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கமைய, பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான கோரிக்கைகளை முன்வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதனைத் […]

ஒழுக்கத்தைப் பேணுமாறு பொலிஸார் வேண்டுகோள்!

பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டிக் காலப்பகுதியில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு பொலிஸார் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். பாடசாலைகளின் கௌரவத்தையும் நற்பெயரையும் பாதுகாக்கும் வகையில் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கமைய, பொது இடங்களில் பாடசாலையின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். வீதிகளில் சத்தமிடுவதையோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதையோ தவிர்க்க வேண்டும். ஏனைய பாடசாலை மாணவர்களுடன் தர்க்கங்கள் அல்லது மோதல்களில் ஈடுபடக்கூடாது. லொறிகள், ட்ரக்டர் வண்டிகள் […]

குடும்பத் தகராறால் மனைவி கழுத்தறுத்துக் கொலை; கணவன் தப்பியோட்டம்

மாரவில, கட்டுநேரிய – பேன்கட பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் அவரது கணவனால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு 11.40 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்துக்கு (119) கிடைத்த தகவலையடுத்து, மாரவில பொலிஸார் குறித்த வீட்டுக்கு விரைந்து சென்றுள்ளனர். இதன்போது, வீட்டின் படுக்கையறைக்குள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் காணப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். […]

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூவர் கைது!

உடுதும்பறை பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூவரை உடுதும்பறை பொலிஸார் கைது செய்துள்ளனர். உடுதும்பறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கஹடலியத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது. அவ்வேளை மூன்று பேர் கைது செய்யப்பட்டதோடு, புதையல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட நவீன உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றினர். உடுதும்பறை, கஹடலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 மற்றும் 50 வயதுடைய இரு ஆண்களும், 45 வயதுடைய பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக […]

அமெரிக்காவுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை – குமார் குணரத்தினம்

உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ள அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை எனவும் அவர்கள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “வர்க்கத்திற்கு அதிகாரம் – அதிகாரத்திற்கு கட்சி” எனும் தொனிப்பொருளில் முன்னிலை சோசலிசக் கட்சியின் நான்காவது தேசிய மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது இதில் தலைமையுரை ஆற்றும் […]