இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – ரணில்

“ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஈரானை விட ஏனைய நாடுகளிலிருந்தே இலங்கை அதிகளவில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட ரனில் விக்ரமசிங்க, ஈரான் ஒருவேளை ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) எண்ணெய் கப்பல்கள் மீது குண்டுகளை வீசி, கப்பல் போக்குவரத்தைத் தடுத்தால் மாத்திரமே பிரச்சினை ஏற்படும் எனக் குறிப்பிட்டார். ஆனால், தற்போது வரை அத்தகையதொரு சூழல் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். கொழும்பு […]
நுவரெலியாவில் ‘உப்புப் பனி’

நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் இன்றும் உறைப்பனிப் பொழிவு காணப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே நுவரெலியாவில் இவ்வாறான உறைப்பனி நிலைமை நிலவி வரும் நிலையில், இன்றும் அதன் தாக்கம் தொடர்ந்தது. குறிப்பாக, மாலை நேரங்களில் நிலவும் அதிகப்படியான குளிரைத் தொடர்ந்து, அதிகாலை வேளைகளில் புற்களின் மேல் உறைபனி அல்லது ‘உப்புப் பனி’ படர்ந்து காட்சியளிக்கிறது. கடந்த காலங்களில் இத்தகைய உறைப்பனி நிலைமை அரிதாகவே காணப்பட்ட போதிலும், தற்போது இது தொடர்ச்சியாக நிலவி வருகின்றது. இயற்கையின் இந்த மாற்றத்தை […]
லண்டனில் ‘கடற்புலிகளின் வரலாற்று ஆவண நூல்’ வெளியீடு!

“கடலில் கரைந்துவிட்ட காலங்களும் வரலாற்றில் தடம் பதித்துவிட்ட நினைவுகளும்” எனும் நூலின் முதலாம் பாகம் லண்டன் வெம்பிளி (Wembley)யில் உத்தியோகபூர்வமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) அன்று வெளியிடப்பட்டது. தமிழீழப் போராட்ட வரலாற்றில் கடற்புலிகளின் பங்களிப்பு எத்தகையது என்பதை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தும் நோக்கிலும், அவர்களது வீரச் சாதனைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் நோக்கிலும் ‘கடலின் மடியின்’ குழுமத்தினால் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. கடற்புலிகளால் போராட்டக் காலங்களில் கடற்பரப்பில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள், இக்கட்டான சூழ்நிலைகளிலும் அவர்கள் மக்களுக்காக எவ்வாறான […]
ஈரான் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும்; அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது

“ஈரான் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார். ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லாரிஜானி இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், ‘‘டொனால்டு ட்ரம்ப் தனது, “தவறான நம்பிக்கைகளால்” இந்த பிராந்தியத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்க துருப்புக்களுக்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார். தனது ஆளுமையை நிலை நாட்டிக்கொள்வதற்கான விலையை, அமெரிக்க வீரர்கள் மற்றும் […]
கட்டுநாயக்க – மத்திய கிழக்கு விமானப் பயணங்கள் அனைத்தும் இரத்து
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த அனைத்து விமானப் பயணங்களும் இன்றைய தினமும் (2) இரத்து செய்யப்பட்டுள்ளன. யுத்தம் ஆரம்பமான 28ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படவிருந்த 115 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமை சீராகும் வரை பயணிகள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 13 பேர் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். யாழ். நகரில் மருந்தகம் ஒன்றை உடைத்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை கொள்ளையடித்த ஒருவரும், நெடுங்குளம் பகுதியில் வீடு உடைத்து நான்கரை இலட்சம் ரூபாய் கொள்ளையடித்த இருவர் உள்ளிட்டவர்களே இவ்வாறு கைது […]
வடமராட்சி வடக்கில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன மீனவர் நேற்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 27 ஆம் திகதி இரவு கடலுக்குச் சென்ற குறித்த மீனவர் பயணித்த படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியது. அதனை சீர்செய்ய முற்பட்ட போது கடலில் வீழ்ந்து காணாமல் போனதாகக் எமது செய்தியாளர் தெரிவித்தார். பின்னர் அவருடன் சென்ற சக மீனவர் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பருத்தித்துறை கொட்டடிப் பகுதி […]
வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு
நாட்டின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண்ணொருவரும், ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். களுபோவில – தெஹிவளை வீதியில், களுபோவில பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் முதலாவது கோர விபத்து இடம்பெற்றுள்ளது. தெஹிவளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வேறு வீதிக்குத் திருப்ப முற்பட்ட போது, எதிர்த்திசையிலிருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் […]
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்; சர்வதேச அங்கீகாரத்துடன் விசாரணை நடத்தினால் சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

இந்த அரசாங்கத்தினால் சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு விசாரணையை நடத்தினால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுக் கட்சியாக அல்லது கூட்டணியாக இலங்கை தமிழரசு கட்சி செல்லும் என்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லையெனவும் […]
திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்; மருதனார்மடத்தில் சம்பவம்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்று (02) மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் தானாகவே தீப்பற்றி எரிந்ததா, அல்லது யாராவது தீ மூட்டினரா என இதுவரை தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.