மௌனம் காக்கும் விஜய்; மாதர் சங்கம் கடும் கண்டனம்!

டிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. விவாகரத்து மனுவில் விஜய் மீது சங்கீதா திருமணம் மீறிய உறவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையே முன்வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பலரும் இதுகுறித்து விவாதித்து வருகின்றனர். குறிப்பாக தவெக தொண்டர்கள், சங்கீதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்தான் சங்கீதாவை இழிவாக விமர்சனம் செய்வோருக்கு […]
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இதன் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வழமைபோல் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் இந்த கப்பல் சேவையில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு […]
மக்களின் உணர்வுகளை புரிந்து மக்களோடு பயணிக்க அரசு தயாராக இருக்க வேண்டும் – மன்னார் மறைமாவட்ட ஆயர்

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்கி அதற்குப் பதிலாக வேறு சட்டங்களை முன் மொழியாது மக்களின் உணர்வுகளை புரிந்து மக்களோடு பயணிக்க அரசு தயாராக இருக்க வேண்டும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார். அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் மறை மாவட்ட மக்களுக்கு எழுதிய தவக்கால திரு மடலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். குறித்த மடலில் மேலும் குறிப்பிடுகையில்,பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சி பீடமேறிய இன்றைய அரசாங்கத்தின் மட்டில் மக்கள் கொண்டிருந்த பல எதிர்பார்ப்புகள் இன்றும் எதிர் பார்ப்புகளாகவே […]
ஈரானின் இடைக்கால உயர் தலைவர் அலிரேசா அராஃபி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டாரா?

ஈரானின் இடைக்கால உயர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அலிரேசா அராஃபி, தனது கடமையை பொறுப்பேற்று 24 மணிநேரம் நிறைவடைவதற்கு முன்னரே, வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக, சரிபார்க்கப்படாத சில சமூக ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் வைரலாகி, சர்வதேச மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அலிரேசா அராஃபி கொல்லப்பட்டதாக பரப்பப்பட்ட செய்தி, ஈரானிய அரசு ஊடகங்களாலோ சர்வதேச செய்தி நிறுவனங்களாலோ உறுதிப்படுத்தப்படவில்லை. ஈரானின் உயர் தலைவரான அலி காமேனி இஸ்ரேல் – அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, அலிரேசா அராஃபி […]
முதியோர் விடுத்துள்ள கோரிக்கை

கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுகள் உரிய நேரத்தில் வழங்கப்படாமையினால், முதியோர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தமக்குரிய கொடுப்பனவுகள் குறித்த திகதியில் வழங்கப்படாத காரணத்தினால், முதியோர்கள் நாளாந்தம் தபால் நிலையங்களுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டுகள் பின்வருமாறு, நடமாட முடியாத நிலையில் உள்ள முதியோர்கள் கூட, கொடுப்பனவு வந்துள்ளதா எனப் பார்ப்பதற்காக ஒவ்வொரு முறையும் முச்சக்கர வண்டிகளில் […]
எரிபொருளைக் கொள்கலன்களில் சேகரிக்கத் தடை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் சேமிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு புதிய கட்டுப்பாடுகளை இலங்கைப் பொலிஸார் விதித்துள்ளனர். இது குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு, நாட்டுக்குள் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, தட்டுப்பாடு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சத்தில் பொதுமக்கள் எரிபொருளை அதிகளவில் சேமிக்கத் தேவையில்லை என்று பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். சில […]
வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துக – வடக்கு ஆளுநர்

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் தம்மிக பதபெந்தி அவர்களின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று(01.03.2026) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தை நோக்கிப் பல முதலீட்டாளர்கள் வருகை தருகின்றனர். […]
3,400ற்கும் மேற்பட்ட விமான பயணங்கள் மத்திய கிழக்கில் இரத்து

வளைகுடா நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டிருப்பதால் 3,400க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது 300,000 பேர் சிக்கித் தவிப்பதாகவும் வெளியேற்றங்களுக்கு உதவுவதற்காக பிரித்தானிய குழுக்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கட்டாரில் இருந்து வெளியான விமான கண்காணிப்பு தரவுகளின்படி, போரின் முதல் சில நாட்களில் 3,400க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. துபாய் சர்வதேச விமான நிலையம், ஷார்ஜா, அபுதாபி மற்றும் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பிராந்திய விமான […]
நீர்கொழும்பில் ஜேர்மன் விமானி மர்ம மரணம்!
நீர்கொழும்பில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஓய்வு பெற்ற ஜேர்மன் நாட்டு விமானியின் மரணம் தொடர்பில், பிரேத பரிசோதனை நடத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் ரகித அபேசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார். ஏத்துக்கால, புனித செபஸ்தியான் வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதிக்கு நேற்று(1.3.2026) நேரில் சென்ற நீதிவான், அங்கு ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தார். அதனைத் தொடர்ந்து, சடலத்தை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து பிரேத பரிசோதனை முன்னெடுக்குமாறு நீர்கொழும்பு தலைமையக […]
25க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம்

கிண்ணியா நகரப் பகுதியில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் இன்று (02.3.2026) விசேட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தற்போது புனித ரமலான் காலம் என்பதால், கிண்ணியா பிரதான வீதியில் பொதுமக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது. போதிய அகலமின்மை காரணமாக இப்பாதையில் அடிக்கடி சன நெரிசலும், நீண்ட வாகன நெரிசலும் ஏற்பட்டு வருகின்றது. இதனைச் சீர்செய்யும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் […]