ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் – மனோகணேசன்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி செய்கிறார். மலையகத்துக்குச்சென்று பெருந்தோட்டத்தொழிலாளர்களின் கைகளைப்பிடித்துப் பார்க்கிறார். ஆனால் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், அரசியல்கைதிகள் விடுதலை, மலையக மக்களுக்கான காணி உரித்து என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே ஜனாதிபதி வெறும் ‘கண்காட்சியை’ விடுத்து, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் என தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார். […]
ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. FlightRadar24 தரவுகளின்படி, ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள ரோட்டா மற்றும் மொரோன் இராணுவத் தளங்களில் இருந்து 15 அமெரிக்க விமானங்கள் வெளியேறியுள்ளன. இதில் குறைந்தது 7 விமானங்கள் ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் தளத்தில் தரையிறங்கியுள்ளன. ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரெஸ் கூறுகையில், அமெரிக்காவுடன் இணைந்து இயக்கப்பட்டாலும், இந்தத் தளங்கள் ஸ்பெயினின் இறையாண்மைக்கு […]
ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சருடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, சீன வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண நிலைமைகளுக்கு மத்தியில் ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளை நிராகரிப்பதாகவும், ஈரானின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் இராஜதந்திர […]
தமிழர்களின் பூர்வீக கிராமத்தை முஸ்லிம் கிராமம் என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி – தனபாலசிங்கம் நிர்மலன்

தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் என தெரிவித்து எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என அபகரிப்பதற்காக செயற்படுகின்றனர். இதனை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் தெரிவித்தார். வாழைச்சேனை கிண்ணியடியில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் […]
எதிர்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டமானது பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (3) இடம்பெறவுள்ளது. தற்சமயம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக, பிராந்தியத்தில் பணிபுரியும் நமது நாட்டு மக்களில் நலன்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், இந்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் நமது நாட்டைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடி, இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டே இக்கூட்டம் இடம்பெறலுள்ளது.
வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட முயன்ற நபரை வாளினால் வெட்டி விரட்டிய வீட்டின் உரிமையாளர்!

களுத்துறை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து உரிமையாளரை நோக்கித் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்த முயன்ற இனந்தெரியாத நபர் ஒருவர், வீட்டின் உரிமையாளரால் கதிரை மற்றும் கத்தியால் தாக்கப்பட்டுத் துரத்தியடிக்கப்பட்டுள்ளார். களுத்துறை, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த “பெத்தா” எனப்படும் நபர், வீட்டின் உரிமையாளரிடம் வாங்கிய 30,000 ரூபா கடன் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது, அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரே திடீரெனத் துப்பாக்கியை எடுத்து வீட்டு உரிமையாளரைச் சுட […]
அவசரகால நிலை நீடிப்பு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலை சர்வதேச சந்தையில் உயர்ந்தது!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நேற்று (1) நடவடிக்கை எடுத்திருந்தது. இதனால் குறித்த வழியூடான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட தடங்கலாலும் ஏனைய பிற காரணிகளாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உலக இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கட்டார் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலானவை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடல் மார்க்கமாகப் போக்குவரத்து செய்யப்படுகின்றன. கத்தாரின் முக்கிய வாடிக்கையாளர்கள் […]
திருமலையில் மாணவர்களின் வெளிப்புற ஓவியப் பயிற்சி

திருகோணமலை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை அண்மித்த இடத்தில் ASP சித்திரக் கலைக்கூடத்தில் கற்கும் மாணவர்கள் இன்று திங்கட்கிழமை (02) வெளிப்புற சித்திரப் பயிற்சியில் ஈடுபட்டனர். இப்பயிற்சியில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன், கலைக்கூடத்தின் ஆசிரியர் சுதர்சன் வழிநடத்தலில் நிலக்காட்சி (Landscape) ஓவியங்களை வரைந்து நடைமுறை அனுபவத்தை பெற்றனர். கோட்டைப் பகுதியைச் சூழவுள்ள இயற்கைக் காட்சிகள், கடற்கரை பின்னணி, வரலாற்று கட்டிட அமைப்புகள் ஆகியவற்றை கவனித்து அவற்றை ஓவிய வடிவில் பதிவு செய்யும் பயிற்சியே […]
பஞ்சாபில் இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பஞ்சாபில் 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. உடனே காவல்துறை, தீயணைப்புப் படை அதிகாரிகள், வெடிகுண்டு அகற்றும் படைகள், மோப்ப நாய் படைகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் பள்ளி வளாகத்திற்கு விரைந்தன. சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருள்களும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. வெடிகுண்டு மிட்டலைத் தொடர்ந்து பள்ளிகளில் சற்று […]