இலங்கை வான் பரப்பில் வெளிநாட்டு போர் விமானங்கள்?

இலங்கை வான்வழியில் வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என இலங்கை விமானப்படை மறுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது மேற்கொண்ட இராணுவ தாக்குதல்களின் பின்னர், இலங்கையிலும் வானில் இராணுவ விமான இயக்கம் அதிகரித்துள்ளதாக சிலர் ஊகித்த நிலையில், இது குறித்து பொதுமக்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த விமானப்படை பேச்சாளர், அண்மையில் காணப்படும் விமான இயக்கங்கள் அனைத்தும் உள்நாட்டு நடவடிக்கைகளுக்கானவையாகும் என்றும், திட்டமிட்ட […]

யாழில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை நிலவுகிறது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்றிலிருந்து யாழில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது.

பதவி விலகுவது குறித்து சனத்!

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று (28) நடைபெற்ற போட்டியின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளாரா என்பது குறித்து சனத் ஜயசூரிய கருத்து வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற போட்டியின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், தான் முன்னரே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும், தனது ஒப்பந்தக் காலம் எதிர்வரும் ஜூன் மாதம் வரை […]

அலி கமேனி – ஈரான் அதி உச்சத் தலைவர் கொல்லப்பட்டமை உறுதி

ஈரான் அதி உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தனர். அத்துடன் உயிரிழந்த அலி கமேனியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது. எனினும் அதனை ஈரான் பாதுகாப்பு மற்றும் வௌிவிவகார அமைச்சு மறுத்திருந்தது. இந்நிலையில், அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தமையை தற்போது ஈரான் அரச ஊடகம் உறுதிப்படுத்தி செய்தி வௌியிட்டுள்ளது. முன்னதாக அவரது […]