இலங்கை விமானப்படை 27ஆவது சைக்கிள் சவாரி

இலங்கை விமானப்படையின் 27ஆவது சைக்கிள் சவாரியின் முதலாவது சுற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இலங்கை விமானப்படையின் 75 வது வருட நிறைவினை முன்னிட்டு இலங்கை விமானப்படை சைக்கிள் சவாரி சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு 27 ஆவது விமானப்படை சைக்கிள் சவாரி நீர்கோழும்பில் நேற்று 2026 பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பமானது. நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலான சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்தினை 2 மணித்தியாலம் மற்றும் 47 நிமிடத்தில் நிறைவு செய்து ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த […]
டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்
நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படாத டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் இன்னும் 298 பேர் காணப்படுகின்றனர். அவர்களையும் நிரந்த சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் (கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்) இலவச சுகாதாரத் துறையில் மக்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் வேண்டுகோளின் பேரில் 640 டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் நிரந்த சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஜேவிபிக்கு தொடர்புள்ளதால் குண்டுவெடிப்பு விசாரணை முடக்கம்?

யிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களும் தொட்பு பட்டுள்ளதால் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கடுகளவேனும் முன்னுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்தார். புலனாய்வுத்துறை முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் கைது தொடர்பில் வெள்ளிக்கிழமை (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளை ஒருபோதும் […]
புதிய பொருளாதார உத்திகளுக்கு ஏற்ப காணிகளை விடுவிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பல்வேறு நாடுகள் அவற்றின் எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட கொவிட் தொற்றுநோய் காரணமாக உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டதுடன், ஒரு நாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்புக்கும், அதன் மக்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமானது என்றும், அதன்படி, நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாக உணவுப் பாதுகாப்பிற்கான திட்டங்களைத் தயாரிக்கும் அதே வேளை, முறையான ஆய்வுக்குப் பிறகு புதிய பொருளாதார உத்திகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட அளவு காணிகளை […]
முசல்குத்தி, வீரமாணிக்கங்குள மீள்குடியேற்றத்திற்கு வனவளத்திணைக்களம் தடையாக உள்ளது – எம்.பி. சத்தியலிங்கம்

வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முசல்குத்தி, வீரமாணிக்கங்குளம் கிராமத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த பல குடும்பங்கள் உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த காலங்களில் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். தற்போது அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற வரும்போது அதற்கு வனவளத்திணைக்களம் தடையாக இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை (26) வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எனவே இந்த […]
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய நிறைவுநாள் விசேட பூஜைகள்

ச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமர்சையாக இன்று 28ஆம் திகதி சனிக்கிழமை இறுதிநாள் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளன. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி் இன்று சனிக்கிழமை (28) காலை சிறப்புக் கூட்டுத் திருப்பலியாக நிறைவேற்றப்படவுள்ளது. யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் மற்றும் இந்திய சிவகங்கை மறை மாவட்ட குரு முதல்வர் ஆகியோரின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு […]
இலங்கை இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகக் கொடியுடன் பயணம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்துக்குச் சென்ற இலங்கைப் படகு ஒன்றில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ கொடி பறக்கவிடப்பட்டிருந்தமை அங்கு கூடியிருந்த இந்திய யாத்திரிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவில் திரண்டுள்ளனர். இதன்போது, இலங்கையிலிருந்து சிறிய படகு ஒன்றில் கச்சதீவுக்குப் பயணித்த சில இளைஞர்கள், நடிகர் விஜய்யின் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் […]
ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய கால அவகாசம்

2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது ரம்புக்கனை பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்த சம்பவத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான பதில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு உயர் நீதிமன்றம் நேற்று(27) மனுதாரர் தரப்புக்கு கால அவகாசம் வழங்கியது. ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய […]
கிராம உத்தியோகத்தர்களின் போராட்டம் இடைநிறுத்தம்

2009/2010 ஆம் ஆண்டுகளில் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் குழுவின் தரப் பிரச்சினைகள் தொடர்பாக, மார்ச் மாதம் 03 ஆம் திகதி பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னால் நடத்தப்படவிருந்த அமைதிப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 2009/2010 குழுவின் கிராம உத்தியோகத்தர்களுக்கும், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர் (உள்நாட்டலுவல்கள்), மேலதிக செயலாளர் (கிராம அலுவலர் நிர்வாகம்), நிறுவனப் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலைத் […]
ஈரானில் பதற்றம்: பிரித்தானிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்

ஈரான் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை பிரித்தானியா தற்காலிகமாக மீள அழைத்துள்ளது . நேற்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ பயண ஆலோசனையில், ஈரானில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகம் கடந்த ஜனவரி மாதமே மூடப்பட்ட நிலையில், தற்போது அதிகாரிகள் அனைவரும் வெளியேறியுள்ளனர். இனி அங்கிருந்தான பணிகள் தொலைதூர முறை மூலம் […]