இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட்; இன்று இரு நாடுகளின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஆட்டம்

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளை நிறைவு செய்யும் வகையில், போட்டியை நடத்தும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (28) இரவு 7.00 மணிக்கு பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்திடம் நேற்று (27) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்ததையடுத்து, இரண்டாவது குழுவிலிருந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணியைத் தீர்மானிப்பதில் இப்போட்டி மிகவும் தீர்மானமிக்கதாக மாறியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை இது ஒரு ஆறுதல் வெற்றியாக […]
பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய திருமணம் முடிக்காத நபர் ஒருவர் நீண்டகாலமாகத் தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவுகளை வழங்கி வந்துள்ளார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட யுவதி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், நேற்று (27) சந்தேகநபரை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, அவர் அந்தப் பகுதியில் உள்ள பல பெண்களுக்கு நீண்டகாலமாக […]
தென்கிழக்கு ஆசியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி செயலி நிறுவனமான ‘கிரப்’ (Grab), செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது சேவைகளை மேம்படுத்தவும், அதன்மூலம் எதிர்வரும் 2028ஆம் ஆண்டிற்குள் தனது இலாபத்தை மூன்று மடங்காக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், உணவு விநியோகம், போக்குவரத்து மற்றும் நிதிச் சேவைகளில் ஏஐ (AI) நுட்பங்களைப் புகுத்துவதன் மூலம் செலவுகளைக் குறைத்து செயல்திறனை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ‘கிரப் கோ-பைலட்’ (Grab Co-pilot) போன்ற புதிய கருவிகளை […]
‘டித்வா’ சூறாவளியால் உயிரிழந்தவர்கள் தொடர்பான நினைவேந்தல்

‘டித்வா’ சூறாவளியினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, நெலும்மல கிராமத்தில் நடைபெற்ற மூன்றாம் மாத நினைவையொட்டிய அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார். கண்டி மாவட்டத்தின் மினிப்பே பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்லேகலதெபொக்கா கிராம அலுவலர் பிரிவின் நெலும்மல கிராமத்தில் 05 கிலோமீற்றர் இற்கும் அதிகமான பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, நேற்று(27) பமுணுபுர படமுல்ல கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற மூன்றாம் மாத நினைவையொட்டிய அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். டித்வா சூறாவளியினால் […]
இஸ்ரேலில் இருந்து வெளியேற விரும்பினால் அதை இன்றையே செய்யுங்கள்!

இஸ்ரேலில் இருந்து வெளியேற விரும்பினால், அதை இன்றையே செய்யுங்கள் என்று இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபீ, தெரிவித்துள்ளார். அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இது தொடர்பாக 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க […]
இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: அமெரிக்க முன்னாள் தூதரக அதிகாரிக்கு ஆயுள் தண்டனை!

இரண்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்த அமெரிக்க முன்னாள் தூதரக அதிகாரி ஃபோட் சிடாஃபா மாராவிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில், புர்க்கினா பெசோவின் தலைநகர் வாகடூகுவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான குடியிருப்பில் இந்த கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமிகள் 13 மற்றும் 15 வயதுடையவர்களாவர். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்ட மாரா, அவர்களுக்கு உதவி செய்வதமைக்கு கைமாறாக […]
‘இரு அமர்வுகள்’ கூட்ட நாள் நெருங்கும் வேளையில் சீனாவில் முக்கிய இராணுவ அதிகாரிகள் ஒன்பது பேர் பதவி நீக்கம்!

சீனாவின் மிக முக்கியமான வருடாந்திர அரசியல் கூட்டமான ‘இரு அமர்வுகள்’ (Two Sessions) அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், 9 இராணுவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 19 சட்டமியற்றுபவர்களை சீன அரசு பதவியிலிருந்து நீக்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. நீக்கப்பட்டவர்களில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தரைப்படை தளபதி லி கியோமிங் மற்றும் முன்னாள் கடற்படை தளபதி ஷென் […]
குற்றச்செயல்களைத் தடுக்க; பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்

நாட்டில் குற்றச்செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸ் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட “Tell IGP” (பொலிஸ் மா அதிபருக்குக் கூறுங்கள்) எனும் இணையவழி முறைப்பாட்டுச் சேவை 2026ஆம் ஆண்டிலும் புதிய மேம்படுத்தல்களுடன் செயற்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக, பொதுமக்கள் தமக்கு ஏற்படும் அசௌகரியங்கள் அல்லது அவசர சம்பவங்கள் குறித்து நேரடியாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும். இச்சேவையின் ஊடாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் […]
காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றுக்கு எதிராக கிடைக்க பெற்ற பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையை அடுத்து குறித்த விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் […]
ரப்பர் உற்பத்தி நிலையத்துக்கு சொந்தமான கிடங்கில் பாரிய தீ

களுத்துறையில் ரப்பர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்றுக்கு சொந்தமான கிடங்கில் திடீரென தீ பரவியதால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். அந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ரப்பர் பொருட்கள் தீயில் முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கிடங்குக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு முச்சக்கரவண்டி, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தீயில் முற்றாக எரிந்துள்ளன. இந்நிலையில் களுத்துறை நகராட்சி மன்றத்தின் தீயணைப்புப் படையினர், பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் குடியிருப்பாளர்களின் உதவியுடன் […]