தனது கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கு நன்றி தெரிவிப்பு

என்பிபி அரசாங்கத்திற்கு தான் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றியமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். டெங்கு கட்டுப்பாட்டாளர் 840 பேரை நிரந்தர சேவையில் இணைத்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். இலவச சுகாதாரத் துறையில் மக்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் சிறப்புப் பங்காற்றி வருகின்றனர். டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார். […]

முழுமையான வசதிகளுடனான நீதிமன்ற வளாகங்கள் இல்லை

எமது நாட்டில் முழுமையான வசதிகளுடன் கூடிய நீதிமன்ற வளாகங்கள் இல்லை. மேலும் நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகள் இன்று -நேற்று உருவானவை அல்ல, கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினைகள் என நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மாத்தறை கோட்டவில நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற, மாத்தறை நீதிமன்ற வளாகத்தின் அடிப்படை வசதி தேவைகள் குறித்து மாத்தறை வழக்கறிஞர் சங்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த […]

எரிசக்தி அமைச்சர் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இந்திய உயர்ஸ்தானிரகத்தில் நடைபெற்றது. எரிசக்தி துறையில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து விவாதித்துள்ளனர். மேலும் வளர்ந்து வரும் ஏனைய துறைகளின் ஒத்துழைப்பு, ஈடுபாடு தொடர்பிலான கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. தரம் குறைவான நிலக்கரி கொள்வனவினால் நாட்டில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது நிலக்கரியை விநியோகிக்கும் இந்திய நிறுவனமான Trident Chemphar […]

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா – இஸ்ரேல்!

அமெரிக்க மற்றும் ஈரானிய தாக்குதல்களுக்கு ஈரான் மிக மோசமான விதத்தில் பதிலளிக்கும் என்று ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தெஹ்ரான் தயாராகி வருவதாகவும், எதிர் தாக்குதல்கள் கொடூரமான வகையில் இருக்கும் என்றும் ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிஸி, நீங்கள் தொடங்கிய இந்தத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது இனி உங்கள் கைகளில் இல்லை என கடுமையாக எச்சரித்துள்ளார். […]

ஆதாரமற்ற கருத்துகள் தெரிவித்ததற்காக கவுன்சிலரிடம் மன்னிப்பு கேட்ட வன்கூவர் மேயர்

வன்கூவர் மேயர் கென் சிம் (Ken Sim) தன் சக கவுன்சில் உறுப்பினரான சீன் ஓர் (Sean Orr) சட்டவிரோத போதைப்பொருட்களை விநியோகித்ததாக எந்த ஆதாரமும் இன்றி கூறியதற்காக மன்னிப்பு கோரியுள்ளார். “நேற்று நான் கவுன்சிலர் ஓர் உடன் பேசினேன்; என் கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டேன்,” என்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகங்களிடம் சிம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய விரிவான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து, அதே அறிக்கையை பன்னிரெண்டு முறைமீண்டும் கூறினார். […]

போதைப்பொருள் பாவனையிலிருந்து ஒன்ராறியோ மக்களை மீட்கப் பெரும் நிதி ஒதுக்கீடு

கனேடிய மக்கள் மெட்ரோ ரயில்களிலும் பொதுப் போக்குவரத்து இடங்களிலும் வெளிப்படையாக போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதால் பாரியளவிலான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்கள் என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் சமூக வலைத்தளத்தில் தனது கருத்தினைப் பகிர்ந்துள்ளார். அதனால் தான் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுத்து போதையில் வாழ்கின்ற மக்களுக்கு அதிலிருந்து நிரந்தர விடுதலையைப் பெற உதவும் சிகிச்சை மையங்களுக்கு அரை பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட முதலீட்டை செய்திருக்கின்றோம் என்பதோடு இதன் மூலம் ஒன்ராறியோவில் வசிக்கும் மக்களைப் […]

ஜிந்துப்பிட்டி கொலையாளிகளுக்கு உதவிய இருவர் கைது

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்து, மேலும் நால்வருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றச் செயலுக்கு உதவிய சந்தேகநபர் ஒருவரும் சந்தேகநபரான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச் செயலின் பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் துப்பாக்கியுடன் தப்பிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதியே இந்த சந்தேகநபர் என்பதும், சந்தேகநபரான பெண் அவருக்குத் துணையாக இருந்துள்ளார் என்பதும் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்த நிலையில், […]

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடனான தொடர்பு குறித்து பில் கிளின்டனின் விளக்கம்

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணையில், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ரன் முக்கிய விளக்கமளித்துள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் எப்ஸ்டீன் விசாரணை குழுவிற்கு வெள்ளிக்கிழமை வழங்கிய ஆரம்ப அறிக்கையில், எப்ஸ்டீனுடன் தமக்கிருந்த தொடர்பு “குறுகிய அறிமுகம் மட்டுமே” என்றும், அது அவரது குற்றங்கள் வெளிச்சத்துக்கு வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே முடிவடைந்ததாகவும் கிளின்டன் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீன் அழித்த பெண்கள் மற்றும் சிறுமிகள் நீதி மட்டுமின்றி ஆறுதலையும் பெற வேண்டியவர்கள் என குறிப்பிட்டுள்ளார். எப்ஸ்டீனுடன் […]

போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (27) மாலை கைது செய்துள்ளனர். அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களிடம் இருந்து 13 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும், 14 கிலோ கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார். மேலும், இவர்களிடமிருந்து 9 மில்லிமீற்றர் […]

சனத் ஜயசூரிய பயிற்சியாளராகப் பணியாற்றும் கடைசிப் போட்டி

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28) நடைபெறவுள்ள போட்டியே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பயிற்சியாளராகப் பணியாற்றும் கடைசிப் போட்டியாகும். இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் தான் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜயசூரிய இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே உறுதிப்படுத்தியிருந்ததுடன், அந்தத் தீர்மானத்தில் அவர் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை. பதவி விலகல் தீர்மானம் குறித்து ‘அத தெரண’ விடுத்த வினவலுக்குப் பதிலளித்த […]