புத்த கோவில்களுக்காக பிக்கு ரோபோ கண்டுப்பிடிப்பு

ஜப்பான் உலகின் முன்னணி தொழில்நுட்ப நாடுகளில் ஒன்றாகும். இப்போது, ​​ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் பல நூற்றாண்டுகள் பழமையான மத மரபுகளுடன் தொழில்நுட்பத்தை கலக்க முடிந்தது. ஜப்பானில் உள்ள புத்த மதத்தினரின் எண்ணிக்கை 83 முதல் 87 மில்லியன் (மக்கள் தொகையில் சுமார் 46 சதவீதம்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் புத்த மதத்தை வெறும் மதமாக அல்லாமல் பாரம்பரிய கலாசார அங்கமாக நம்புகிறார்கள். இதன் காரணமாக, ஜப்பானில் உள்ள புத்த கோவில்களில் துறவிகள் பற்றாக்குறை உள்ளது. […]

தம்பதியினர் உட்பட மூவர் 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது

30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை மற்றும் எகொடஉயன பிரதேசங்களைச் சேர்ந்த 37, 20 மற்றும் 19 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, பாணந்துறை உடஹமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 20,000 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியினர் 23,000 ரூபா மாதாந்த வாடகைக்கு […]

வடக்கு, கிழக்கில் பாரிய மக்கள் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்தக் கோரியும், பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றன. மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் ஆரம்பமான இந்தக் கண்டனப் பேரணி, திருமலை வீதி ஊடாக மட்டக்களப்பு நகர் வரை ஊர்வலமாகச் சென்றது. நகரில் உள்ள மணிக்கூண்டுக் கோபுரத்திற்கு […]

சிவப்பு பிடியாணை சந்தேகநபர் கட்டுநாயக்கவில் அகப்பட்டார்!

துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று (27) கட்டார் நாட்டிலிருந்து நாட்டை வந்தடைந்தபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 2022.03.24 அன்று கடவத்தை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது டி-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டு இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்தக் குற்றச் செயல் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த […]

தெப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

சாலியபுர – தெப்பங்குளம் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டு உரிமையாளருக்கும் வீட்டிற்கு வந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், வீட்டு உரிமையாளர் வீட்டிற்கு வந்தவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலினால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழந்தவர் சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவராவார். இச்சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வான்பரப்புகள் மூடல்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் தங்களது வான்பரப்பை மூடியுள்ளன. அதன்படி ஈரான், ஈராக் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்களது வான்பரப்புகளை மூடியுள்ளன.

நுரைச்சோலை நிலக்கரி கொள்வனவுக்கு டெண்டர் கோரல்

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்திற்காக 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியை அவசரமாகக் கொள்வனவு செய்ய லங்கா நிலக்கரி நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், 2026 மார்ச் – ஏப்ரல் காலப்பகுதிக்காக அவசர நிலக்கரி கொள்வனவுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கரி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், லங்கா நிலக்கரி நிறுவனம் இவ்வாறு அவசர நிலக்கரி கொள்வனவுக்கான […]

உடனடியாக சந்தைக்கு வருகிறது லாஃப்ஸ் எரிவாயு

ஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்த எரிவாயு தொகுதியை ஏற்றிச்சென்ற கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் உடனடியாக சந்தைக்கு எரிவாயு தொகுதி வெளியிடப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. உள்நாட்டு நுகர்வோர் இன்று முதல் வழக்கம் போல் லாஃப்ஸ் எரிவாயு விற்பனை முகவர்கள் மூலம் தேவையான எரிவாயு சிலிண்டர்களை வாங்க முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஃப்ஸ் எரிவாயு வாடிக்கையாளர்கள் இன்று (28) வழக்கம் போல் […]

இலங்கைத் தமிழர் பிரான்ஸில் சாதனை!

பிரான்ஸில் இலங்கையை பின்புலமாக கொண்ட தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். தலைநகர் பாரிஸில் சிதம்பரப்பிள்ளை ஜெகதீபன் சிறந்த பாண் தயாரிப்பாளருக்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். ஜெகதீபன் 142 போட்டியாளர்களை வீழ்த்தி Grand Prix de la Baguette de Tradition Franchise de la Ville de Paris 2026 பட்டத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், அவரது பேக்கரியான Fournil Didot பேக்கரி 4,000 யூரோ பரிசை வென்றுள்ளது. மேலும் ஜனாதிபதியின் எலிசே மாளிகைக்கு பாண் […]

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவி!

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மேலதிகமாக யூரோ ஒரு மில்லியனை மனிதாபிமான உதவியாக ஒதுக்கியுள்ளது. மனிதாபிமான பங்காளர்களுடன் இணைந்து வழங்கப்படும் இந்த உதவி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்க பயன்படுத்தப்படும். ‘டித்வா’ சூறாவளிக்குப் பிறகு, பொறியியல், தொழில்நுட்ப உதவி மற்றும் பொருள் உதவி உட்பட, ஐரோப்பிய ஒன்றியமும் அதன் பங்காளர்களும் இதற்கு முன்னர் இலங்கை மக்களுக்கு 2.35 மில்லியன் யூரோவை […]