சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை துரிதப்படுத்துமாறு பணிப்பு

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை மிகவும் திறமையாகவும் ஒருங்கிணைந்த ரீதியிலும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16 ஆவது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் தனித்தனியாகச் செயல்படாமல், ஒரு கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் விரைவான பலனைப் […]