அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தேவையில்லை!

எந்தவொரு பயங்கரவாத் தடுப்புச் சட்டமும் தேவையில்லை என சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உபதவிசாளர் ஞா.கிஷோர் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான பிரேரணையினை சபையில் முன்வைத்து உரையாற்றினார். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத குறித்த விடயத்தினை சபையில் பிரேரிக்க முடியாது என தமது எதிர்ப்பை வெளியிட்டனர். எனினும் தேசிய மக்கள் சக்தியின் 3 […]

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு

அம்பாறையில் உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ வீரர் உயிரிழந்தார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே நேற்று(26.2.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த விபத்தில் காயமடைந்தவர் மற்றுமொரு வாகனத்தில் அம்பாறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் என்பதுடன் இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திரவியல் பட்டாலியனைச் சேர்ந்த 22 வயதுடையவர் […]

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா உடனடியாக பதவி விலக வேண்டும்!

ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்து, 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளது. இந்தத் தோல்வி இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சுப்பர் 8 சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 61 ஓட்டங்களால் இலங்கை தோல்வியடைந்தது. நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை அணி, 107 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தனது அரையிறுதி வாய்ப்பை இழந்தது. […]

சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி துணைவேந்தராக நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார். உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வரும் அவர், எதிர்வரும் 25.03.2026தொடக்கம் துணைவேந்தர் ஆக நியமனம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளை பெற்று முதன்மை நிலையை பேராசிரியர் வேல்நம்பி பெற்றிருந்தார். அத்துடன், துணைவேந்தர் தேர்தலில் கடந்த மூன்று தடவைகள் முதல் மூன்று ஸ்தானங்களுள் தெரிவாகி இருந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட உள்ளதாக தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் இ.செல்வகுமார் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பிலான ஊடக சந்திப்பு நேற்று (26.2.2026)மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த போராட்டமானது நாளை 28ஆம் திகதி மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் முன்னெடுக்கப்பட உள்ளது. அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கோரத்தை உணர்ந்தவர்களாக இந்த […]

தனியார் பாடசாலை மாணவர்கள் 16 பேருக்குக்கு ஒவ்வாமை

எல்பிட்டி பகுதியிலுள்ள தனியார் பாடசாலையொன்றைச் சேர்ந்த 16 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக நேற்று வியாழக்கிழமை (26) அன்று எல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சருமத்தில் ஏற்பட்ட அரிப்பு மற்றும் தடிப்பு காரணமாகவே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த பாடசாலையின் ஒரே மண்டபத்தில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு ஒவ்வாமைக்கு உள்ளாகியுள்ளனர். ஏதேனும் பூச்சிகள் கடித்தமையினால் அல்லது […]

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த வைத்திருந்த உயர் ரக முந்திரி பருப்பு பறிமுதல்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக படகில் ஏற்றப்பட்டிருந்த, இந்திய மதிப்பில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 620 கிலோ உயர்தர முந்திரிப் பருப்பு மூட்டைகளை ‘கியூ’ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மரைக்காயர்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, மரைக்காயர்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கஞ்சா, […]

நீண்டகாலமாகப் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ’பம்போ’ என்பவர் கைது

அம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாகப் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ‘பம்போ’ எனும் போதைப்பொருள் வியாபாரி, பெருமளவு ஹெரோயினுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் குணவர்தனவிற்கு (73734) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு, தொட்டலங்க பகுதியில் இருந்து தனியார் பேருந்து மூலம் அம்பாறைக்கு ஹெரோயின் கடத்தி வரப்படுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று அதிகாலை குறித்த பேருந்தை […]

வெளியேற்றப்பட்ட சிம்பாப்வே!

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை சிம்பாப்வே இழந்தது. குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் ஏற்கெனவே மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்ற சிம்பாப்வே, சென்னையில் முடிவுக்கு வந்த இந்தியாவுடனான போட்டியிலும் தோற்றமையைத் தொடர்ந்தே தொடரிலிருந்து வெளியேறியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: சிம்பாப்வே இந்தியா: 256/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் ஷர்மா 55 (30), ஹர்திக் பாண்டியா ஆ.இ 50 (23), […]

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனிச் சிங்கள மொழியில் கலந்துரையாடல்; ரவிகரன் சீற்றம்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை (26) நடைபெற்றது. கூட்டத்தின் போது நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்கள மொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தின் நடைமுறைகள் மொழிபெயர்ப்பின்றித் தொடர்ச்சியாகச் சிங்கள மொழியில் இடம்பெற்று வந்ததைக் கண்டு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் சீற்றமடைந்தார். தனது ஆசனத்தில் இருந்து எழுந்த அவர், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்குத் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் […]