ஜனாதிபதி தலைமையில் தேசிய வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு

ஹிமிகம (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (27) அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது. அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் ‘உரித்து’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம், கொரகஹவெவ […]
கடற்கரைப் பகுதியில் படகிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு
கல்கிஸ்ஸை, இரத்மலானை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட மீன்பிடி படகொன்றில் இருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 24 வயதுடைய இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு
சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க டி சில்வாவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு […]
தென்னாப்பிரிக்காவின் சுகாதாரத்துறையில் பெரும் பின்னடைவு

தென்னாப்பிரிக்காவிற்கு வழங்கப்பட்டு வந்த அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகமையின் (USAID) நிதியுதவி நிறுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, எச்.ஐ.வி (HIV) மற்றும் காசநோய் (Tuberculosis) சிகிச்சைகளுக்காக அமெரிக்கா வழங்கி வந்த பெரும் நிதி ஒதுக்கீடு திடீரென நிறுத்தப்பட்டதால், இலட்சக்கணக்கான நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முந்தைய அரசாங்கம் எடுத்த இந்த அதிரடி முடிவானது, தென்னாப்பிரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் சர்வதேச விவகாரங்களில் அதன் […]
பிரித்தானிய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

லண்டனின் கிரென்பெல் கோபுர (Grenfell Tower) தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அந்தத் கட்டிடத்தின் சுவர்களில் பதிந்துள்ள தங்களின் அன்புக்குரியவர்களின் கைரேகைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்திடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்தப் பயங்கரத் தீ விபத்தின் போது, கட்டிடத்திற்குள் சிக்கியவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற அடையாளங்களாகவும், அவர்களின் கடைசி நினைவுகளாகவும் அந்தச் சுவர்களில் உள்ள கைரேகைகள் கருதப்படுகின்றன. சிதைந்துள்ள அந்தக் கட்டிடத்தை இடிப்பது அல்லது சீரமைப்பது தொடர்பான […]
கரீபியன் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் எரிசக்தி தட்டுப்பாடு

கரீபியன் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, வெனிசுலா தனது மசகு எண்ணெயை கியூபாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் அதிரடியாக அனுமதி அளித்துள்ளது. நீண்டகாலமாக வெனிசுலா மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான பொருளாதாரத் தடைகளில் இந்த தளர்வு ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. கியூபாவில் நிலவும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் பொதுமக்களின் போராட்டங்களைத் தணிக்க இந்த நடவடிக்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த முடிவானது கரீபியன் பிராந்தியத்தில் […]
செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல், 15 ஆம் திகதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டியம் (தேசிய), நாட்டியம் (பரதம்), சங்கீதம் (கீழைத்தேய), சங்கீதம் (மேலைத்தேய), நாடகமும் அரங்கியலும் (சிங்களம்), நாடகமும் அரங்கியலும் (தமிழ்), நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்) ஆகிய […]
காணி முரண்பாடு; இளையக் சகோதரனை கொலை செய்த மூத்த சகோதரன்!

காணி முரண்பாடினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, மூத்த சகோதரனால் தமது இளைய சகோதரனைக் கறுவாப் பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் எல்பிட்டிய, படுவன்ஹேன பொல்கஸ்வத்த பகுதியில் நேற்று (26) இடம்பெற்றுள்ளது. இவர்கள் இருவரினதும் வீடுகள் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணியை அளவிடுவதற்காக நில அளவையாளர்கள் வந்து அளவீட்டுப் பணிகளை முடித்துச் சென்றதன் பின்னரே, காணி தொடர்பில் இருவருக்கும் இடையில் இந்த வாய்த்தர்க்கம் ஆரம்பமாகியுள்ளது. இதன்போது உயிரிழந்தவர் மீது கறுவாப் பொல்லால் தாக்குதல் […]
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கைது; அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கைது நடவடிக்கை அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கர்தினாலையும், கத்தோலிக்க திருச்சபையையும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்ற இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கையாகவே சுரேஷ் சலே கைதினை நான் கருதுகிறேன். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இதுபோன்ற […]
கடற்றொழிலுக்கு சென்றவர் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் இரவு நேர வீச்சுவலை கடற்றொழிலுக்கு சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் நேற்று இரவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வீச்சுவலை தொழில் நடவடிக்கைக்காக சென்ற 45 அகவையுடைய வேலு செந்தில்நாதன் என்ற குடும்பஸ்தர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அவரின் மனைவி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று (26) காலை முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதன்போது, குறித்த வட்டுவாகல் பகுதியில் ஏனைய கடற்றொழிலாளர்கள் தேடுதல் நடத்தியபோது […]