திருகோணமலையில் வாகன ஓட்டுநர்கள் சிரமம்

திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (27.02.2026) காலை வேளையில் கடும் மூடுபனி நிலவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடும் மூடுபனி காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். காலை வேளையில் ஏற்பட்ட இந்த கடும் மூடுபனி காரணமாக வீதிகள் மற்றும் சுற்றுப்புற சூழல் மறைக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சவாலுக்கு உள்ளாகியுள்ளது. அத்துடன், பிரதான வீதிகளில் பயணித்த வாகன சாரதிகள் […]
வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு

ற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, […]
அரச வைத்தியர்கள் புதிய தீர்மானம்!
விசேட மருத்துவ சேவையொன்றை நிறுவுதல் உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான பதிலை வழங்காத காரணத்தினால், எதிர்வரும் திங்கட்கிழமை (02) முதல் வைத்தியசாலைகளின் கிளினிக் நடவடிக்கைகளில் இருந்து விலக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள 50 கிளினிக் நிலையங்கள் மற்றும் நடமாடும் கிளினிக் அமைப்புகள் என்பன அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் என அந்த சங்கத்தின் செயலாளர் பிரபாத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஆரம்ப சுகாதார சேவையை பராமரிக்க பணியாளர்கள் பற்றாக்குறை […]
கோட்டைமுனை பாடசாலைக்கு நவீன தகவல் தொழில்நுட்ப கணினி மையம்

இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், விமானப்படை தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்காக முழுமையாக பொருத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப கணினி மையம் கடந்த திங்கட்கிழமை (23) கையளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப கற்றல் சூழலை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய குளிரூட்டப்பட்ட கணினி ஆய்வகத்தில் 15 டெஸ்க்டாப் கணினிகள், யுபிஎஸ் அமைப்புகள் மற்றும் […]
குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல்

கிளிநொச்சி, குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரங்கள் மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தின் போது அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) இரவு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது, மணல் ஏற்றிக்கொண்டிருந்த இரண்டு உழவு இயந்திரங்களைக் கைது செய்ய முற்பட்ட வேளையில், அவை அதிரடிப்படையினரின் […]
புத்தூரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராகப் போராட்டம்

அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமுறைச்சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி புத்தூரில் கறுப்புப் பதாகை ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புப் பதாகைகளை வீதியில் காட்சிப்படுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (26) நண்பகல் புத்தார் பிரதேச சபையின் முன்பாக தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தலைமையில் ஒன்று கூடிய பிரதேச சபையின் உறுப்பினர்கள் அரசு நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தினையும் நீக்கவேண்டும் என […]
வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு கோரிக்கை!

வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு உள்ளூர் தமிழ் சைவர்கள் உரிய அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இலங்கை இராணுவம், தமிழர்களின் தனியார் காணியை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கிலேயே மாற்றுப் பாதையை விரிவுபடுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக […]
பீல் பிராந்திய காவல்துறையில் 88 பேர் இணைவு

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறைக்கு பெருமையும் அர்த்தமுமிக்க நாளாக இன்றைய நாள் அமைந்தது என பீல் பிராந்திய காவல்துறை தனது லிங்டின் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. எங்கள் வரலாற்றிலேயே மிகப்பெரிய அணியாக 88 பயிற்சியாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக காவல் துறை அதிகரிகளாகப் பதவியேற்றனர். பீல் பிராந்திய காவல்துறை குடும்பத்தின் புதிய உறுப்பினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஓமந்தை விபத்தில் இருவர் படுகாயம்

வவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (27) அதிகாலை இடம்பெற்றிருந்ததுடன் ஏ 9 வீதியின் போக்குவரத்தும் சுமார் 03 மணிநேரம் தடைப்பட்டதுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது. குறித்த விபத்தானது அதிக விபத்தானது அதிக பனிமூட்டம் காரணமாக இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் […]
உலகப் பொருளாதார மன்றத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவி விலகல்

உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) தலைமைச் செயல் அதிகாரியான ஜெர்மி ஜுர்கன்ஸ் (Jeremy Jurgens), பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) தமக்கு இருந்த தொடர்புகள் குறித்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து பதவி விலகல் செய்துள்ளார். எப்ஸ்டீனுக்கும் ஜுர்கன்ஸுக்கும் இடையே இருந்த நிதித் தொடர்புகள் மற்றும் சந்திப்புகள் குறித்து அண்மைக்காலமாகப் புலனாய்வுச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் நற்பெயரைக் காக்கும் பொருட்டு […]