திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா)அவர்கள் 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற நவரெத்தினம (அப்பு அண்ணா) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி மகேஸ்வரி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும் கனகசபை தெய்வானைக்கண்டு ஆகியோரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற வாசுகி மற்றும் குமரன், தேவகி (தேவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் வரதராஜ் (கண்ணன்), பத்மினி மோகனகுமார்(குமரன்) ஆகியோரின் அன்பு மாமியும் பாலசுப்ரமணியம் இராயவேல், இலட்சுமி தேவி, ரூபசௌந்தரி […]

ஒன்ராறியோ லைன் சுரங்கப்பாதை திட்டத்தில் மற்றுமொரு மைல்கல்!

கனடாவின் கிங் (King) மற்றும் பதர்ஸ்ட்(Bathurst) பகுதியில் அமைந்துள்ள ஒன்ராறியோ லைன் (Ontario Line) நிலையத்தில் அகழ்வு பணிகள் 101,300 கன மீட்டர் ஆழத்தில் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இது ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளத்தை விட 40 மடங்கு பெரிய அளவு என்பது குறிப்பிடத்தக்கது என ஒன்ராறியோவின் போக்குவரத்து அமைச்சர் பிரப்மீத் சர்க்காரியா தனது லிங்க் டின் வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார். இந்த மாற்றத்தை உருவாக்கும் மெட்ரோ திட்டத்தை வழங்குவதற்காக நாம் இன்னொரு முக்கியமான படி முன்னேறியுள்ளோம். இது […]

ஆசிரியர் இன்றி யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் கலைகளில் சாதனைபடைக்கும் சிறுமி!

ஆசிரியர் இன்றி யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் கலைகளைத் தாமாகவே கற்று, அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வரும் மாணவி ஒருவரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை அல்டோரா போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த இவர், அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஏழாம் ஆண்டில் கல்வி பயிலும் 12 வயதுடைய சசிகுமார் திருசிகா ஆவார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து, அதுபோலவே தானும் செய்ய வேண்டும் என்ற ஆவலில் யாருடைய துணையுமின்றி யோகா கலையைப் பயின்றதாக […]

நகைக் கடையில் நூதன திருட்டு!

தலவாக்கலை பிரதான நகரில் கடந்த 24 ஆம் திகதி நகைக்கடை ஒன்றில் நூதனமான முறையில் தங்க மோதிரம் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நகை வாங்குவது போல் கடைக்குள் நுழைந்த நபர், நகைகளைப் பார்ப்பது போல நடித்துக் கடையுரிமையாளரின் கவனத்தைத் திசை திருப்பியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில், தான் மறைத்து வைத்திருந்த போலி தங்க மோதிரத்தை காட்சிப் பெட்டியில் வைத்துவிட்டு, அங்கிருந்த உண்மையான தங்க மோதிரத்தைத் திருடியுள்ளார். பின்னர், நீண்ட நேரம் நகைகளைப் பார்த்த அவர், அன்று எதனையும் […]

தேடப்பட்டுவரும் சந்தேக நபர்கள்; பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ்

களுத்துறை, வாடியமங்கடை சந்திக்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவரும் சந்தேக நபர்களைக் கைது செய்ய போலிஸ் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸ் மற்றும் களுத்துறை பிரிவு குற்ற விசாரணை பணியகம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், 27 வயதுடைய […]

வனப்பகுதியில் விஷமிகள் தீ வைப்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம புகையிரத பாதைக்கு அருகாமையிலுள்ள வன பாதுகாப்புப் பகுதிக்கு, நேற்று (25) மாலை இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இத்தீப்பரவல் காரணமாக பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தத் தீ விபத்தின் காரணமாக இலங்கைக்குக்கே உரித்தான அரிய வகை தாவரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் சிறிய வகை உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், வறட்சிக் காலங்களில் காடுகளுக்குத் தீ வைக்கப்படுவதால் நீரூற்றுகள் வற்றிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. […]

கொழும்பு மாவட்ட காணி மதிப்பில் தொடரும் ஏற்றம்

கொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், தனது அதிகரிப்புப் போக்கைத் தொடர்ச்சியாகப் பேணியவாறு, 2024ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 10.6% இனால் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சியானது, காணி மதிப்பீட்டுச் சுட்டெண்ணின் உப சுட்டெண்களான வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் ஆகிய மூன்று உப சுட்டெண்களிலும் பிரதிபலித்துள்ளதுடன், அவை முறையே 12.4%, 11.3% மற்றும் 8.0% வருடாந்த அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. இதேவேளை, 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பதிவான […]

நாளை கச்சத்தீவு திருவிழா: யாழ் மாவட்ட செயலகத்தின் விசேட வழிகாட்டல்கள்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவானது, யாழ். மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் 2026 பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, இந்தியத் தூதரகம், நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் ஏனைய திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இவ்விழா குறித்து, யாழ். மாவட்ட செயலகம் முக்கிய அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. 27.02.2026 அன்று காலை 4.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து […]

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். “இது 300 மனித உயிர்களைப் பலிகொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் உயிர்த்த ஞாயிறுத் திருப்பலியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள். உயிரிழந்தவர்களில் அனைத்து மதங்களையும், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களும் உள்ளனர். இது ஒரு […]

போதைப்பொருள் வியாபாரம்: தாயும் மகனும் கைது!

மலர்ச் சாலையொன்றை நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். இது பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் இயங்கி வந்த பிரபலமான மலர்ச் சாலையாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நேற்று (25) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்த மலர்ச் சாலையின் உரிமையாளரான மகனும் அவரது தாயாரும் 21 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மகனுக்கு 39 வயது எனவும், தாயாருக்கு 69 வயது […]