பிரிட்டிஷ் எயார்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது?

இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பிரிட்டிஷ் ஏர்வேஸ் மதிப்பிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எனினும் பிராந்திய தேவையைப் பயன்படுத்தி மாலைத்தீவு வழியாக விமான சேவையை முன்னெடுப்பதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. பிரிட்டிஷ் எயார்வேஸ் கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போயிங் B777 விமானத்தைப் பயன்படுத்தி இலங்கைக்கான விமான சேவைகளை முன்னெடுத்தது. ஹேலிஸ் ஏவியேஷன் 2013ஆம் ஆண்டு முதல் […]
ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைனின் பதில்

உக்ரைன் அணு ஆயுதங்களை பெற முயற்சித்து வருவதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டை உக்ரைன் கடுமையாக மறுத்துள்ளது. குறிப்பாக, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உதவியுடன் அணு ஆயுதங்களை பெற உக்ரன் முயற்சி செய்கிறது என்ற ரஷ்யாவின் குற்றச்சாட்டு “பொய்யானது” என உக்ரைன் தெரிவித்துள்ளது. பொய்யான தகவல்களை பரப்புவதில் புகழ்பெற்ற ரஷ்ய அதிகாரிகள் மீண்டும் பழைய ‘டெர்ட்டி பாம்’ (dirty bomb) கதையை உருவாக்க முயல்கிறார்கள்” என உக்ரைன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹெரோஹி தியாக்கி தெரிவித்துள்ளார். “இந்த அபத்தமான […]
வலுசக்தி அமைச்சரை ஜனாதிபதி பதவி நீக்க வேண்டும்

நிலக்கரி கொள்வனவு மோசடிக்கு காரணமான வலுசக்தி அமைச்சரை ஜனாதிபதி பதவி நீக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடடால், அரசாங்கம் என்றவகையில் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் இதன் பொறுப்பை கூட்டாக ஏற்றுக்கொள்வதாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். நலக்கரி கொள்வனவில் ஏற்பட்டுள்ள மோசடி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவந்தமையாமல் இதுவரை இலங்கை மின்சாரசபைக்கு 7.6 பில்லியன ரூபா […]
கூட்டணிலேயே நாம் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவோம் – சுஜித் சஞ்சய பெரேரா

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டணிலேயே நாம் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவோம். மாகாணசபைத் தேர்தலிலிருந்தே எமது ஒருமித்த பயணம் ஆரம்பமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளோம். மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை […]
உலகளாவிய ரீதியிலான ஆயுதக்குறைப்பு முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயார் – அமைச்சர் விஜித்த ஹேரத்

தற்போது நிலவும் பூகோள அரசியல் நெருக்கடிகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீது பாரிய சவால்களைத் தோற்றுவித்திருப்பதுடன் பல்தரப்புக்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆயுதப்பரிகரண (ஆயுதக்குறைப்பு) முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், எதிர்கால சந்ததியினருக்கான பாதுகாப்பானதும், ஸ்திரமானதுமான உலகைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் ஆயுதப்பரிகரண முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் திங்கட்கிழமை (23) ஆரம்பமான ஆயுதப்பரிகரணம் (ஆயுதக்குறைப்பு) தொடர்பான உயர்மட்டக் கூட்டம் இன்றைய தினத்துடன் […]
தேசியப் பெருமையின் அடையாளங்களாக பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் சாதனைகள் இருக்க வேண்டும் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

அங்கீகரிக்கப்பட்ட நேர்மையும் சிறந்த சுயாதீனமும் கொண்ட ஒரு கல்விமானாகவுள்ள பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் சாதனைகள் அவமதிப்பிற்குரியதாக அன்றி, தேசிய பெருமையின் அடையாளங்களாக இருக்க வேண்டும். அவ்வாறிருக்கையில் அவரது கணவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மையப்படுத்திய நடவடிக்கைகளுக்குள் அவர் உள்வாங்கப்படுவது கடும் கவலையைத் தோற்றுவிப்பதாக பெண் உரிமைகள் துறையில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் முன்னாள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய சுயாதீன கல்விமான்களது நற்பெயருக்குக் களம் விளைவிக்காத வகையில் விசாரணை […]
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு நாமலின் உரை குறித்து வெளியிட்ட தகவல்

தமிழர்கள் மீது ராஜபக்சக்கள் நிகழ்த்திய இனப்படுகொலை காரணமாகவே, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ச நிகழ்த்தவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது, “ஒக்ஸ்போர்ட் யூனியன் ஏற்பாடு செய்த உரை அல்லது உரையாடல் நிகழ்வுகள் எந்தக் காரணத்துக்காகவும் இரத்துச் செய்யப்படுவதில்லை. அவ்வாறு இரத்துச் செய்வதை கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகவும், தன் புகழுக்கான இழுக்காகவும் அந்த நிறுவனம் கருதுகின்றது. இவ்வாறான நிலையில், நாமல் […]
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 102,900 சந்தேக நபர்கள் கைது !

முழு நாடும் ஒன்றாக – தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரையில் 5000 கிலோ கிராமுக்கும் அதிக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 102 900 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 15 இலட்சத்துக்கும் அதிகமான தனிநபர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் […]
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது!

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது. இதன் பொறுப்பை ஏற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். அதேபோல் பொலிஸ் துறையும் இன்று அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆகவே பொலிஸ்மா அதிபரும் உடன் பதவி விலக வேண்டும் என மக்கள் குரல் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். மக்கள் குரல் அமைப்பின் சார்பாக ஊடக அறிக்கையை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, […]
அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இங்கிலாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியின் தமது முதற் போட்டியில் இலங்கையை ஏற்கெனவே வென்றிருந்த இங்கிலாந்து, பல்லேகலவில் தற்போது முடிவுக்கு வந்த பாகிஸ்தானுக்கெதிரான போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னுமொரு போட்டி மீதமிருக்கையிலேயே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை உறுதிப்படுத்தியது.