கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைக்க பாதாள உலகத்தோடு தொடர்புகொண்டவர்கள்…

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவி பெறப்பட்டமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மீரிகம பொலிஸ் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்தக் குற்றச் செயல்கள் ஒரு குறிப்பிட்ட திசையிலேயே வளர்ச்சியடைந்துள்ளன. அரசியல் ஆதரவுடனேயே பாதாள உலகச் செயற்பாடுகளும் போதைப்பொருள் கடத்தலும் […]
புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் இன்று (25) அதிகாலை பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நோர்வே பாராளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்க முன்னேற்றம் குறித்து ஆராய்வு

இலங்கையில் ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெற்று ஒரு வருடகாலம் பூர்த்தியடைந்திருக்கும் பின்னணியில், இலங்கையின் சமகால நிலைவரம் தொடர்பான சிறப்பு இடையீட்டு விவாதமொன்று நாளை வியாழக்கிழமை (26) நோர்வே பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட நோர்வே பாராளுமன்ற தொழிற்கட்சி உறுப்பினரான கம்ஸி குணரத்னத்தினால் இச்சிறப்பு இடையீட்டு விவாதத்துக்கான யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதுடன், இவ்விவாதத்தில் நோர்வே வெளிவிவகார அமைச்சரும் உரையாற்றவுள்ளார். இலங்கையில் ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, அவற்றின் ஊடாகப் புதிய அரசாங்கம் தெரிவாகி ஒரு […]
அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!
வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியங்க மத்தும பண்டார மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்குறித்த நபர்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது. மஹபொல இணையவழி லொத்தருக்கான விநியோகத்தர் ஒருவரைத் தெரிவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட ஆனந்த தேரர்; பிக்குகள் மாநாடு முற்றிலும் தோல்வி?

கொழும்பில் கடந்த 20ஆம் திகதி நடத்தப்பட்ட பிக்குகள் மாநாடு முற்றிலும் தோல்வியடைந்ததற்கான முழுப் பொறுப்பையும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மீது சுமத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, அந்த மாநாட்டை ஏற்பாடு செய்ய பொறுப்பு வழங்கப்பட்டிருந்த வெளிப்புற தரப்புகளுக்கு பணம் செலுத்தவும் முடியாத நிலைக்கு ஆனந்த தேரர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அந்த மாநாட்டில் பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல தேரர் வெளியிட்ட கருத்துகள் உள்ளிட்ட பொதுமக்களின் எதிர்ப்பை ஏற்படுத்திய பல்வேறு உரைகளுக்கான பொறுப்பு, செலவுகளை ஏற்கும் […]
ஐ.நா வாக்கெடுப்பைப் புறக்கணித்த இலங்கை!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன. “உக்ரைனில் நிலையான அமைதிக்கான ஆதரவு” என்ற பெயரிலான இந்தத் தீர்மானம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு நான்கு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், 107 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன், 51 நாடுகள் வாக்கெடுப்பைப் […]
விசேட போக்குவரத்துத் திட்டம்!

2026 T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், நாளை ( 25) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியைக் முன்னிட்டு விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் மற்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளை இரவு 7:00 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கொழும்பு போக்குவரத்துப் […]
பாதுகாப்பற்ற தொடருந்து கடவையைக் கடக்க முயன்ற இளம் அதிகாரிகள் பலி!

பயாகல பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையைக் கடக்க முயன்ற டொப் கார் தொடருந்தில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தவர்கள் தியலகொட பால கட்டுமானத் திட்டத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்கள், போலகம, ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த 22 வயதான ரணசிங்க ஆராச்சிலாக் பசிந்து சுபுன் ரணசிங்க, திட்ட நிர்வாக அதிகாரி எல்லெதெனியவத்த, மற்றும் 28 வயதான ஆய்வக தொழில்நுட்ப அதிகாரி கருணாரத்ன முதியன்செலாகே விஹங்க ருக்ஷன் பண்டார கருணாரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளனர். […]
1.5 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு!

ஹல்துமுல்லை, இலுக்பெலஸ்ஸ வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா தொகையை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் வருமாறு: இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்துடன் இணைந்து ஹல்துமுல்லை பொலிஸார், பண்டாரவளை பொலிஸ் பிரிவின் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்தச் சோதனையை முன்னெடுத்துள்ளனர். வனப்பகுதியில் விற்பனைக்காகத் தயாரான நிலையில் சாக்குகளில் பொதி […]
ஜெர்மனியில் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

ஜெர்மனியில் ஊதியம் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்தக் கோரி, எதிர்வரும் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நாடு தழுவிய உள்ளூர் போக்குவரத்து வேலைநிறுத்தத்திற்கு அந்நாட்டின் ‘வெர்டி’ (Verdi) பொதுத்துறை தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. சுமார் 100,000 பணியாளர்களை உள்ளடக்கிய 150 பேருந்து, டிராம் மற்றும் உள்ளூர் தொடருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் இந்த வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெர்லின் மற்றும் ஹாம்பர்க் போன்ற முக்கிய நகரங்களும் இதில் அடங்கும். வேலை நேரம் குறைப்பு, இரவு மற்றும் வார […]