போர்வீரர்கள் எதிர்கொள்ளும் நிலப் பிரச்சினைகள்…

போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் எதிர்நோக்கும் நிலம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சில் செவ்வாய்கிழமை (24) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் போர்வீரர் சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணியகத்தினால் அடையாளம் காணப்பட்ட நிலப் பிரச்சினைகள் குறித்து விரிவான ஆய்வு […]
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “எனது சவாரி – எனது குரல்”

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, “Ride Colombo 2026” எனும் பெண்கள் மட்டும் பங்கேற்கும் சைக்கிள் சவாரி, எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடல் (Galle Face Green) பகுதியில் நடைபெறவுள்ளது. இலங்கையின் முன்னணி பெண்கள் இணைந்து நடத்தும் இந்நிகழ்வு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்படுகின்றது. பெண்களின் ஒற்றுமை, வலிமை மற்றும் சமூக மாற்றத்திற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாண்டின் தைரியமான மற்றும் ஊக்கமூட்டும் […]
கிளிநொச்சியில் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

சமூக சக்தியென்பது கட்சியை வலுப்படுத்தும் அரசியல் ஆயுதம் அல்ல. அது வறுமையை ஒழிப்பதற்குரிய கூர்மையான ஆயுதமாகும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். எனவே, எல்லா விடயங்களிலும் எதிர்ப்பு அரசியல் நடத்தாமல், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் […]
ஆளுநராகப் பேராசிரியர் சுசிரிபால கடமையேற்பு!

தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுசிரிபால மானவடு, இன்று (25) காலை காலியில் அமைந்துள்ள தென் மாகாண ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் தென் மாகாண பாதுகாப்புப் பிரதானிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். அரசியலமைப்பின் 154ஆவது சரத்தின் பிரகாரம், நேற்று (24) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகை மற்றும் சமூக ஊடக அரச […]
கணவனை அடித்துக் கொன்ற மனைவி
ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருவதண்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (24) காலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஹொரணை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் போருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபராவார். உயிரிழந்த நபர் அருகிலுள்ள வீடொன்றுக்குச் சென்று கதவு, ஜன்னல்களைத் தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்த பெண் இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவிக்கு அறிவித்துள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் […]
ஏற்றுமதித் துறை வளர்ச்சி அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.7% வளர்ச்சியாகும் என அதன் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் விளக்குகையில்: ‘ஜனவரி மாதத்தில் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,165 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதுடன், இது கடந்த […]
சிலாபம் பகுதியில் 14 வயது மாணவி துஷ்பிரயோகம்: உறவினர் கைது
சிலாபம் பகுதியில் தனது தாய் மற்றும் தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த சிறுமி ஒருவர், அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்போது, அவர் ஏற்கனவே இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சிகரமான முறையில் தெரியவந்துள்ளதாக சிலாபம் பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலையொன்றில் 9 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 14 வயது மற்றும் 7 மாதங்களையுடைய […]
யோர்க் பிராந்திய காவல்துறை அரோரா தலைமையக நிகழ்வு

எங்கள் அரோரா(Aurora) தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில், புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட 3 சத்தியப்பிரமாணம் செய்த உறுப்பினர்களையும் 8 பொதுச் சேவை நிபுணர்களையும் நாங்கள் வரவேற்றோம் என யோர்க் பிராந்திய காவல்துறை தனது லிங்டின் தளத்தில் பதிவிட்டுள்ளது. அவர்களின் பதவி உயர்வுகள், சிறப்பான பணித்திறன், துணிச்சலான தலைமையியல், சேவைக்கு கொண்ட அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் சக உறுப்பினர்களுக்கும் சமூகத்திற்கும் காட்டிய இரக்க உணர்வு ஆகியவற்றின் தகைமைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை என்றும் இவர்கள் இனி குழுக்களை […]
ஒன்ராறியோவின் காவல்துறை மாநாடு

ஒன்ராறியோவின் காவல்துறை அமைப்பின் (Police Association of Ontario) 35வது ஆண்டு காவல் பணியாளர் மாநாட்டில் கலந்து கொண்டமை தனக்கு பெருமையாக இருந்தது என ஒன்ராறியோ முதல்வர்டக் பேர்ட் பதிவிட்டுள்ளார். ஒன்டாரியோவை தினமும் பாதுகாத்து வருகிற துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் எமது வாழ்த்துக்கள் என்றும் எங்கள் அரசின் உறுதியான ஆதரவை மீண்டும் அவ்விடத்தில் உறுதிப்படுத்தியதில் மகிழ்ச்சி எனவும் அவர் மேலும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதக் களஞ்சிய நிறுவனத்தின் மனுக்கள் தள்ளுபடி!
எவன்கார்ட் நிறுவனம் பராமரித்து வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைச் செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு ரிட் மனுக்களை ஆரம்பகட்ட பரிசீலனைக்கு உட்படுத்திய பின்னரே, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.