தமிழீழ விடுதலைப் புலிகள் சித்தாந்தம் உலகளவில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது – சஞ்சீவ எதிரிமான்ன

எல்.ரி.ரி.ஈ. ஆதரவு புலம்பெயர் அமைப்புகளின் பல்வேறு தலையீடுகளின் காரணமாக, இறுதியில் அந்த உரையாடல் வாய்ப்பை இரத்து செய்ய பல்கலைக்கழக மாணவர் சங்க அதிகாரிகள் தீர்மானித்தனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மாணவர் […]
புதிய கட்சி தொடங்க உள்ளார் சசிகலா

தமிழகத் தேர்தல் களம் (2026): சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணி: தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் 35 இடங்களைக் கேட்பதாகவும், திமுக 28 இடங்கள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக (TVK) – காங்கிரஸ் பேச்சுவார்த்தை? தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எழுந்துள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சசிகலாவின் புதிய கட்சி: அதிமுக-வை மீட்டெடுக்கப் […]
யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி வழக்கிலிருந்து விடுதலை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கின் விசாரணைகளை எதிர்கொள்ளக் கூடிய தகுதியான மனநிலையில் இருக்கின்றாரா? என்பது தொடர்பில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஊடாகக் கோரப்பட்டிருந்த விசேட மனநல மருத்துவ அறிக்கையை, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். […]
தேசிய மக்கள் சக்தி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (25) அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிந்தோட்டை, கிங்கங்கை மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழுவினர், வீட்டின் கூரை மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியதுடன், பின்னர் வீட்டிற்கு முன்னால் மற்றுமொரு பெற்றோல் குண்டையும் வீசியுள்ளனர். கூரையின் மீது வீசப்பட்ட பெற்றோல் குண்டு வெடித்ததில், கூரையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. மற்றைய பெற்றோல் குண்டு வெடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் […]
சுன்னாகத்தில் மீட்டர் வட்டித் தகராறு; ஒருவர் கைது!
யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்திற்கு மேலாக வட்டி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக வட்டி செலுத்தாத காரணத்தால் வட்டிக்கு பணத்தை கொடுத்தவர் நேற்று இரவு கத்தி முனையில் வட்டிக்கு பணத்தை […]
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு; மன்னாரில் கையெழுத்து போராட்டம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (25) மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது, PTA ஐ நீக்கு!, PSTA சட்ட வரைவை மீள பெறுக, ஊடக […]
விடுதலைப்புலிகளின் ஆயுதம் தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி தோல்வி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் தொடருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருப்பதாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணி தோல்வியில் முடிந்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் 25.02.2026 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வின்போது எந்தவித தடயப்பொருட்களும் கிடைக்கப்பெறாத நிலையில், அகழ்வு பணி இடைநடுவே கைவிடப்பட்டுள்ளது. குறித்த அகழ்வு பணியின் போது தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர்,பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கலந்து கொண்டனர். […]
மின்சார சபை ஊழியர்கள் நாளை அடையாள பணிபுறக்கணிப்பு

இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள் நாளை (26.02.2026) அடையாள பணிபுறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. நாளை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 6 மணிநேர அடையாள பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. குறித்த போராட்டம் காரணமாக மின்சார சபையின் நாளாந்த சேவைகள் மற்றும் பராமரிப்புப் பணிகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஒட்டுமொத்தமாக வெளியேறும் நிலை உருவாகும்!

கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், எல்லைக் கிராமங்களில் நாங்கள் வாழ்வதில் பயனில்லை, நாங்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறும் நிலையே உருவாகும் என முல்லைத்தீவு எல்லைக் கிராமத்தை சேர்ந்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ். ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில், 1984ஆம் ஆண்டு எமது பிரதேசங்களை விட்டு நாங்கள் வெளியேறி வெளி மாவட்டங்களில் […]
இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் படையினருக்கும் மிகவும் கவலையளிக்கும் நாள் இது – அலி சப்ரி

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் படையினருக்கும் இது மிகவும் கவலையளிக்கும் நாள் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில், “தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு வலையமைப்பை அகற்றுதல், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மூத்த தலைவர்களை குறிவைக்க வழிவகுத்த உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் குமரன் பத்மநாதன் (கே.பி.) […]