கிராம உத்தியோத்தர்கள் கலந்துரையாடலுக்கு அழைப்பு

2009/2010 ஆம் ஆண்டுகளில் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்காக அவசரக் கலந்துரையாடல் ஒன்றை வழங்க பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மார்ச் மாதம் 03 ஆம் திகதி பொதுநிர்வாக அமைச்சின் முன்னால் 2009/2010 கிராம உத்தியோகத்தர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அமைதிப் போராட்டத்தை அடுத்து, இந்த அவசரப் பேச்சுவார்த்தை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமது 17 வருடகால தர உயர்வு […]
வைத்திய நிலையமாக இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை!
முல்லேரியா, அம்பத்தலை சந்திக்கு அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் ஹோமியோபதி வைத்திய நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த சட்டவிரோத விபச்சார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். மேற்கு மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் மூன்று பெண்களும் ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆண், ஹோமியோபதி வைத்தியர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதுடன் அவரே அந்த நிலையத்தின் உரிமையாளர் எனவும் தெரியவந்துள்ளது. இங்கு வருபவர்களிடம் ஒரு மணிநேரத்திற்கு 7,000 முதல் 10,000 […]
இஸ்ரேலில் அமெரிக்காவின் போர் விமானங்கள் குவிப்பு

அமெரிக்க விமானப் படையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இஸ்ரேலில் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 20க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகளவில் தென்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் உள்நாட்டுக் குழப்ப நிலைகளும் போராட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்று வரும் நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க காத்திருப்பதாக சர்வதேச பரப்பில் பேசப்பட்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்த்தும் […]
நவம்பர் 28 – உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் ஆண்டுவிழா

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council – WBSC) 60ஆவது ஆண்டு விழா மற்றும் 11ஆவது பொதுச் சபையின் 2ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம், எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசம்பர் 2ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளன. அதன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. உள்நாட்டு, வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் […]
பதுக்கி வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையின் தலைமை விசாரணை அதிகாரி ரவீந்திர ஹதுஹின்ன தெரிவித்தார். நோர்வூட்டில் சமையல் எரிவாயு இருப்புக்கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று (25) குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதன்போது […]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர்

தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் எவையும் இல்லாத நிலையில், பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் Jeunesse Etudiante Tamoule எனும் அரச சார்பற்ற அமைப்பினால் நாளை மறுதினம் (27) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பக்க நிகழ்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச் 31 […]
யாழ்.பொது நூலக நிறுவுநரின் 130ஆவது ஜனன தினம்

யாழ்.பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கிஷ்னேந்திரன், யாழ்.நூலகர், உதவி நூலகர், நூலக பணியாளர்கள், வாசக வட்டத்தினர், கே.எம்.செல்லப்பாவின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து இனிப்புகளை திருடிய சிறுமிகள் கைது

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இனிப்பு பண்டங்களை திருடியதாக கூறப்படும் சிறுமிகள் மூவரை களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறையில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்து கல்வி கற்கும் 13, 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வாவின் தலைமையில், அப்பகுதியில் உள்ள […]
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் குஷ்ஷூடன் மாணவர்கள் இருவர் கைது
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் புதன்கிழமை(25) காலை இரு மாணவர்கள் குஷ் வகை போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ஜேர்மன் டெக் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களின் உடைமையில் இருந்து குஷ் வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் தென்னிலங்கையில் இருந்து வந்து கல்வி கற்பதாக தெரியவந்துள்ளதுடன் ஒரு […]
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சங்கத் தலைவர் தங்கவேல் சிறிதரன் தலைமையில் வந்தாறுமூலை வளாக முன்றலில் புதன்கிழமை (25) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சம்பள முரண்பாடு: அரச சேவைக்கும் பல்கலைக்கழக சேவைக்கும் இடையே நிலவி வந்த சம்பள விகிதத்தைப் படிப்படியாகக் குறைத்த முறையைத் திருத்தி அமைக்க வேண்டும். ஊக்குவிப்பு கொடுப்பனவு (MCA): 45 […]