அரசு ‘பொய் நாடகம்’ ஆடுகிறது: தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு உறுதி இல்லை!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எழுத்து மூலமான எந்த உறுதியும் இல்லை. அதனால் இன்னும் ஒருசில மாதங்கள் சென்ற பின்னர் அதுவும் அரசாங்கத்தின் பொய் நாடகம் என்பது சமூக மயமாகும்போது தெரியவரும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். கொழும்பில் அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து […]
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பழைய காயங்களை மீண்டும் கிளறி இனவாதத்தைத் தூண்டக்கூடாது – கருப்பையா ராமகிருஷ்ணன்

பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஒன்றியங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரைகள் புலம்பெயர் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டமைக்கு நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதிநிதி கருப்பையா ராமகிருஷ்ணன் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளவை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டுக்கு அமைதியைப் பெற்றுக்கொடுத்தார் என்பதை நாம் பாராட்ட வேண்டும். இன்று […]
விசேட செயற்குழு மீது நம்பிக்கை இல்லை – இந்திக அனுருத்த

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் சட்ட சிக்கலை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு மக்கள் விடுதலை முன்னணியினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட செயற்குழு மீது நம்பிக்கை கிடையாது எனஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (23) […]
நீதிமன்ற அவமதிப்பு; தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு எதிராக வழக்கு

தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின்கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீது வழங்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட […]
தாமதிக்கப்பட்டுள்ள பதவியுயர்வுகள்; சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு எச்சரிக்கை

6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூலமான நியாயமான தீர்வுகள் வழங்கப்படாவிடின், விருப்பமின்றிப் போயினும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அக்கூட்டமைப்பு, 6 வருடங்களாக அநீதியான முறையில் மறுக்கப்பட்ட தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தேவையான அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயாராக உள்ளதாக அந்த சங்கம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இந்தத் […]
மலையக புகையிரத பாதை; பேராதனை பால புனரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு?

மலையக புகையிரத பாதையின் பேராதனை புகையிரத பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ரம்புக்கனை மற்றும் கடுகண்ணாவை இடையிலான புகையிரத பாதையை சீரமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு இதுவரை எவ்வித திட்டமும் இல்லை எனவும் இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், மண்சரிவினால் சேதமடைந்த மலையக புகையிரத பாதையின் பேராதனை புகையிரத பாலத்தை புனரமைக்க அரசாங்கம் தலையிட்டு புதிய இரட்டைப் பாலமொன்றை அமைக்க முதலில் முன்மொழிந்த போதிலும், பின்னர் […]
நிலக்கரி கொள்வனவு முறைகேடு: மின்சார சபைக்கு 7,672 மில்லியன் ரூபா நேரடி நட்டம்!

தரம் குறைந்த நிலக்கரியால் மின்சார சபைக்கு 7,672 மில்லியன் ரூபா நேரடி நட்டம்! இலங்கை மின்சார சபை, பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ள கடிதத்தின்படி, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த எட்டு நிலக்கரி கப்பல்களினால் மதிப்பிடப்பட்டுள்ள நேரடி நட்டம் 7,672 மில்லியன் ரூபாவாகும். 900 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனைக் கொண்ட நுரைச்சோலை லக்விஜய மின்நிலையம் நிலக்கரி தகனம் மூலமே இயங்குகிறது. அதற்காக இறக்குமதி செய்யப்பட்ட 8 கப்பல்களின் நிலக்கரி தரமற்றவை என அண்மையில் […]