நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தல் `எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் போர்’ – த.வெ.க. தலைவர் விஜய்

தற்போது நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சம், நிர்வாகத்தை சரியாக செய்யாத முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கும் இடையே நடக்கும் போர். அதாவது, விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் இடையே நடைபெறும் போர் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். த.வெ.க. தலைவா் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் நேற்று திங்கள் கிழமை நடைபெற்றது. அந்தச் சந்திப்புக்குப் பின்னர் த.வெ.க. நிர்வாகிகளை உறுதிமொழி ஏற்க வைத்தார் விஜய். அதில், எங்களை யாரும் […]

ராஞ்சியிலிருந்து டில்லி நோக்கிச் சென்ற விமானம் விபத்து!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டில்லி நோக்கிச் சென்ற ஏர் அம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஏழு பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எஞ்சிய 6 பேரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். ராஞ்சி விமான நிலையத்திலிருந்து நேற்று திங்கள் கிழமை மாலை டில்லி நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தேடுதல் பணிகளுக்குப் பிறகு, விமானம் சத்ரா மாவட்டத்தின் சிமரியா பொலிஸ் எல்லைக்குட்பட்ட கர்மதந்த் கிராமத்திற்கு […]

டொட்டென்ஹாமைத் தோற்கடித்த ஆர்சனல்

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக எபெரெச்சி எஸ்ஸே, விக்டர் ஜைனோகர்ஸ் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றதோடு, டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றன்டல் கொலோ முவானி பெற்றிருந்தார். பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 61 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 56 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும், 51 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அஸ்தன் வில்லாவும் காணப்படுகின்றன. செல்சி, […]

ஈரானில் பதற்றம்; இந்தியர்களை உடனே வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் பதற்றம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி 5 ஆம் திகதி இந்திய அரசு வெளியிட்ட ஆலோசனையின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் முதலானோர் வணிக விமானங்கள் உள்ளிட்ட கிடைக்கக் கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் […]

இலங்கையில் டித்வா சூறாவளி பாதிப்பு: 2.4 லட்சம் பேருக்கு ஐ.நா. உதவி

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, 2025 டிசம்பர் முதல் 2026 ஏப்ரல் வரை மிகவும் பாதிக்கப்படக்கூடிய 6 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு உதவுவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. இதுவரை உதவி பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் என்பதுடன், 4,400 மாற்றுத்திறனாளிகளும் இதில் உள்ளடங்குகின்றனர். 25 மாவட்டங்களில் 69 பங்காளர் […]

மூன்றாம் உலகப் போரை ரஷ்ய ஜனாதிபதி தொடங்கிவிட்டார்! – உக்ரைன் ஜனாதிபதி

மூன்றாம் உலகப் போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தொடங்கியது. இன்றுடன் போர் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு தான் அளித்த பேட்டியின் சுருக்கத்தை, ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வான் பாதுகாப்பு என்பது இன்று மிகவும் […]

புகையிரத சேவையில் நெருக்கடி; சரியான அதிகாரியைத் துரிதமாக நியமியுங்கள்!

அரச நிர்வாக சேவையின் அதிகாரி ஒருவரை புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளராக நியமித்துள்ளதால் புகையிரத சேவையில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. தித்வா புயல் தாக்கத்தால் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களை விரைவாக புனரமைத்து, புகையிரத சேவையை வினைத்திறனாக்குவதற்கு பொதுமுகாமையாளர் பதவியில் சேவையாற்றி ஓய்வுப்பெற்ற பொறியியலாளர்களை உள்ளடக்கிய குழுவை நியமிக்குமாறு வலியுறுத்துகிறோம். மலையக புகையிரத சேவையை மீள ஆரம்பிப்பதற்கு புனரமைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமர […]

மார்ச் 3 இல் அமைதிப் போராட்டம்!

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி 2,300க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் அமைதி வழி போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் நெவில் விஜேதுங்க கருத்துத் தெரிவிக்கையில், 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சேவையில் இணைந்த கிராம உத்தியோகத்தர்களே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இவர்கள் சேவையில் […]

ராஜபக்ஷ குமாரர்களை குறித்து குற்றங்களைச் சாட்டியவர்களுடன் அநுர அரசு இணைந்து இரகசியமாகச் செயற்படுகின்றது? – சம்பிக்க ரணவக்க

கடந்த காலங்களில் ராஜபக்ச குமாரர்களின் நெருங்கிய உறவினர்களுக்குச் சொந்தமானவை என தற்போதைய அநுர அரசாங்கத்தினால் விமர்சிக்கப்பட்ட அதே நிறுவனங்களுடனேயே இன்றும் நிலக்கரி கொள்வனவுக்கான இரகசிய ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி நிறுவனங்களிடமே சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்; கடந்த 2022 ஆம் ஆண்டு […]

தங்கத்தின் விலை கடந்த மூன்று வாரங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டது!

அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற நிலைமையால் உலக சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு குறைந்து வருவதாக சர்வதேச நிதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பும், புதிய வரி நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளும் சந்தையில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. மேலும், அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படும் 170 பில்லியன் அமெரிக்க டொலர் வரி தொகை பற்றிய ஊகங்களும் டொலருக்கு அழுத்தமாக உள்ளது. இதேவேளை, அமெரிக்கா–ஈரான் […]